பயங்கரவாதம் பொது எதிரி: இஸ்ரேல் பிரதமரை சந்தித்த பின் பிரான்ஸ் பிரதமர் பேச்சு| Terrorism is a common enemy: French PMs speech after meeting Israeli PM

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

டெல் அவிவ்: இஸ்ரேல்- பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளுக்கும் பயங்கரவாதம் பொது எதிரி என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை சந்தித்த பின் பிரான்ஸ் பிரதமர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் ராணுவம் – ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே 18வது நாளாக போர் நீடித்து வருகிறது. காசாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு நாட்டு தலைவர்கள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் இஸ்ரேலுக்கு சென்று, தங்களுடைய முழு ஆதரவை இஸ்ரேலுக்கு வழங்குவதாக தெரிவித்தனர்.

இந்நிலையில், இஸ்ரேலுக்கு தனது முழு ஆதரவை தெரிவிக்கும் வகையில் டெல் அவிவிற்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் சென்றார். இதையடுத்து, இஸ்ரேல் பிரதமர் மற்றும் பிரான்ஸ் பிரதமர் இமானுவேல் மேக்ரான் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் பிரான்ஸ் பிரதமர் இமானுவேல் மேக்ரான், ” இஸ்ரேல்- பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளுக்கும் பயங்கரவாதம் பொது எதிரி இஸ்ரேலுக்கு பிரான்ஸ் என்றுமே உறுதுணையாக இருக்கும். ஹமாஸ் தாக்குதலில் 30 பிரெஞ்சு மக்கள் கொல்லப்பட்டனர். எனவே ஹமாஸ் எங்களுக்கு எதிரி” என தெரிவித்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement




Dinamalar iPaper –>

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.