The shooter was found dead | துப்பாக்கி சூடு நடத்திய நபர் சடலமாக கண்டெடுப்பு

லுாயிஸ்டன்: அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு நடத்தி, 22 பேரை கொன்ற ராபர்ட் கார்டு என்ற நபர், சடலமாக மீட்கப்பட்டார்.

அமெரிக்காவின் லுாயிஸ்டன் நகரில், உணவகம் மற்றும் கேளிக்கை விடுதியில், சமீபத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் உயிரிழந்தனர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது, துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், 40 வயதான ராபர்ட் கார்டு என்பது தெரிய வந்தது. இவர், மன நோயாளி என்பதும், துப்பாக்கி சுடுதல் பயிற்சியாளர் என்பதும் தெரிய வந்தது. ராபர்ட் கார்டை கடந்த இரு நாட்களாக போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்திய ராபர்ட் கார்டு சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. லுாயிஸ்டனில் இருந்து, 13 கி.மீ., தொலைவில், லிஸ்பன் நீர்வீழ்ச்சி பகுதியில் உள்ள ஆண்ட்ரோஸ்கோகின் ஆற்றின் அருகே, அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பின், தன்னைத் தானே சுட்டு, ராபர்ட் கார்டு தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.