Tamil News Today Live: Andhra Train Accident: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு – மொத்தம் 18 ரயில்கள் ரத்து!

தேவர் குருபூஜை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

தேவர் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி, காளையார்கோயில் ஆகிய ஒன்றியங்களில் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தேவர் குருபூஜையை ஒட்டி, பசும்பொன்னில் உள்ள அவரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இன்று மரியாதை செலுத்த உள்ளனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, தேவர் குருபூஜை விழாவுக்கு பசும்பொன் வருகை தரும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க மதுரை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா தலைமையில் மதுரை விமான நிலையம் அருகே மேடை அமைப்பதற்கு காவல்துறை அனுமதி மறுத்ததால் காவல்துறையினருடன் அதிமுக நிர்வாகிகள் வாக்குவாதம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் இரவிலிருந்து விடாமல் மழை பெய்துகொண்டிருக்கிறது. தொடர் மழை காரணமாக இராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன்.

Andhra Train Accident: பலி எண்ணிக்கை 11-ஆக உயர்வு! 

ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டத்தில் நேற்று இரவு இரண்டு பயணிகள் ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்து குறித்து ஈஸ்ட் கோஸ்ட்டல் ரயில்வே அதிகாரி பிஸ்வஜித் சாஹு கூறுகையில், “இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர், 50 பேர் காயமடைந்துள்ளனர். தற்போது தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். மீட்புப் பணிகள் தற்போது முடிந்துவிட்டன. சிக்கித் தவிக்கும் பயணிகளுக்கு பேருந்துகள் மற்றும் ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, 22 ரயில்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.