2003-ல் இந்தியா செய்த அதே தவறை செய்த ஆஸ்திரேலியா – டேமியன் மார்டின் அதிருப்தி

உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இரவில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால் அதனை கருத்தில் கொண்டு பவுலிங் எடுத்திருக்கிறார் ஆஸ்திரேலிய அணியின் கேபட்ன் பாட் கம்மின்ஸ். டிரை விக்கெட் பேட்டிங்கிற்கு ஏற்ற பிட்சில் உலக கோப்பை இறுதிப் போட்டிநடைபெறுகிறது. இரவில் பந்துவீசுவது சவாலாக இருக்கும் என்பது தான் ஆஸ்திரேலிய அணியின் கணிப்பு. ஆனால், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேசும்போது, நாங்கள் டாஸ்வெற்றி பெற்றிருந்தால் நிச்சயம் பேட்டிங் தான் எடுப்போம் என ஆணித்தரமாக கூறினார்.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் எடுத்த முடிவு என்பது அந்த அணிக்காக 2003 உலக கோப்பையில் விளையாடிய டேமியன் மார்ட்டின் ஆலோசனைக்கு மாற்றாக இருக்கிறது. உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றபோது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவர், உலக கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்றால்  எந்த பிட்சாக இருந்தாலும் டாஸ்  வெற்றி பெற்றவுடன் கண்ணை மூடிக்கொண்டு பேட்டிங் எடுக்க வேண்டும் என தெரிவித்தார். 2003 ஆம் ஆண்டு உலக கோப்பையில் இவர் பிளேயிங் லெவனில் இடம்பெற்றிருந்த ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, டாஸை தோற்றது. அப்போது இந்திய அணியின் கேப்டனாக இருந்த சவுரவ் கங்குலி டாஸ் வெற்றி பெற்று பவுலிங்கை எடுத்தார்.

அப்போது அவர் பேட்டிங் எடுத்திருந்தால் இந்திய அணிக்கு வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் அவரின் தவறான முடிவில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் இறங்கி 359 ரன்கள் குவித்தது. முடிவில் இந்திய அணி தோற்க, ஆஸ்திரேலிய அணி வாகை சூடியது. ஆனால், இப்போதைய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறார். இரவில் அகமதாபாத்தில் பனிப்பொழிவு அதிகம் இருக்கும் என்பதால் அதனை மனதில் வைத்து இந்த முடிவை எடுத்திருக்கிறார். இந்த முடிவு டேமியன் மார்டினுக்கு அதிருப்தியாக அமைந்திருக்கிறது. உலக கோப்பையை மீண்டும் ஒருமுறை வெல்லும் வாய்ப்பு இரு அணிகளுக்குமே அமைந்திருக்கிறது. இந்திய அணி வெற்றி பெற்றால் மூன்றாவது முறையும், ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றால் 6வது முறையும் மகுடத்தை சூடும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.