Collector lock for famous hospital | பிரபல மருத்துவமனைக்கு கலெக்டர் பூட்டு

மைசூரு : மைசூரின் பிரபலமான,’ஆதித்யா அதிகாரி’ மருத்துவமனைக்கு, பூட்டு போட்டு மாவட்ட கலெக்டர் ராஜேந்திரா உத்தரவிட்டார்.

மைசூரை சேர்ந்த ரவிகவுடா தொட்டப்பா சிவண்ணா என்பவர், 2016ல் விபத்தில் சிக்கி காயமடைந்தார். இவரை சிகிச்சைக்காக மருத்துமனை ஒன்றில் சேர்த்தனர். கூடுதல் சிகிச்சைக்காக 2017ல் மைசூரின், பிரபல தனியார் மருத்துவமனையான ஆதித்ய அதிகாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு, நான்கு மாதம் சிகிச்சையளித்த பின், அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. ஆனால் சிவண்ணா குணமடையாமல் உயிரிழந்தார். தவறான சிகிச்சை அளித்ததாக, மருத்துவமனை மற்றும் டாக்டர் சந்திரசேகர் மீது, சிவண்ணா குடும்பத்தினர் மைசூரு நகர நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளித்தனர். நீதிமன்றமும் விசாரணைக்கு உத்தரவிட்டது.

விசாரணையில் டாக்டர் சந்திரசேகரின் தவறுகள் வெளிச்சத்துக்கு வந்தன. அவரிடம் அனஸ்தீஷியா எனும் மயக்க மருந்து நிபுணர் இல்லாதது, கல்வியறிவு இல்லாதவர்களை செவிலியர்களை நியமித்தது, அனஸ்தீஷியா தொடர்பாக படிக்காதவரை நியமித்திருப்பது உட்பட, சில காரணங்களால் சிவண்ணா இறந்திருக்கலாம் என, விசாரணை அறிக்கையில் விவரிக்கப்பட்டது.

எனவே, அவரது குடும்பத்தினருக்கு, 15.60 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நுகர்வோர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.

இதன்படி, டாக்டர் சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். ஆதித்ய அதிகாரி மருத்துவமனைக்கு பூட்டு போட வேண்டும்.

இங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளை, வேறு மருத்துவமனைக்கு மாற்றும்படி, மைசூரு மாவட்ட கலெக்டர் ராஜேந்திரா உத்தரவிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.