Forcibly applying sindoor does not mean marriage: High Court | மணமக்கள் யாக குண்டத்தை சுற்றினால் தான் திருமணமாக கருதப்படும்: பாட்னா உயர்நீதிமன்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

பாட்னா: பெண்ணின் நெற்றியில் நிர்பந்தமாக குங்குமம் வைப்பது இந்து திருமண சட்டப்படி திருமணம் ஆகாது என்றும், மணமகன் மற்றும் மணமகள் யாக குண்டத்தை சுற்றினால் மட்டுமே திருமணமாக கருதப்படும் எனவும் பாட்னா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பீஹார் மாநிலம் பாட்னாவில் உள்ள லக்கிசராய் பகுதியில் உள்ள கோவிலுக்கு கடந்த 2013ம் ஆண்டு ரவிகாந்த் என்பவர் வழிபாடு நடத்த சென்றுள்ளார். அப்போது அவரை கடத்தி சென்ற சிலர், ஒரு பெண்ணுடன் கட்டாயமாக திருமணம் செய்து வைத்தனர். இதனை எதிர்த்து ரவியின் மாமா, போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க முயற்சித்தும், புகாரை பெற மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் லக்கிசராய் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், திருமணத்தை ரத்து செய்யக்கோரி ரவி மனு தாக்கல் செய்தார். இந்த மனு 2020ல் நிராகரிக்கப்பட்டது.

இதனையடுத்து பாட்னா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.பி.பஜந்திரி மற்றும் அருண் குமார் ஜா ஆகியோர் அடங்கிய அமர்வு, பெண்ணின் நெற்றியில் நிர்பந்தமாக குங்குமம் வைப்பது இந்து திருமண சட்டப்படி திருமணம் ஆகாது என்றும், மணமகன் மற்றும் மணமகள் யாக குண்டத்தை சுற்றினால் மட்டுமே திருமணமாக கருதப்படும் எனவும் தீர்ப்பளித்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.