Simple Dot one Escooter – குறைந்த விலை சிம்பிள் டாட் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுக விபரம்

சிம்பிள் எனெர்ஜி நிறுவனத்தின் குறைந்த விலையில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை டாட் ஒன் என்ற பெயரில் ரூ. 1 லட்சம் விலைக்குள் விற்பனைக்கு டிசம்பர் 15 ஆம் தேதி வெளியிட உள்ளது. இந்நிறுவனம் சிம்பிள் ஒன் என்ற ஸ்கூட்டரை விற்பனை செய்து வருகின்றது.

ரூ.1.45 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பெரிய அளவில் டெலிவரி எண்ணிக்கையை தற்பொழுது வரை வழங்கவில்லை.

Simple Dot One

குறைந்த விலையில் வரவுள்ள புதிய டாட் ஒன் ஸ்கூட்டரின் எந்த தொழில்நுட்ப விபரங்களும் தற்பொழுது அறிவிக்கப்படவில்லை. ஆனால் குறிப்பாக ஓலா எஸ்1 எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்திருக்கலாம்.

சிம்பிள் ஒன் ஸ்கூட்டரில்  8.5 kW மின்சார மோட்டார் பொருத்தப்பட்டு அதிகபட்ச பவராக 11 bhp மற்றும் 72 Nm டார்க் வழங்குகின்றது. இந்த மாடல் ஒருமுறை சார்ஜ் செய்தால் 212KM/charge ரேஞ்சு வழங்கும்.

ஈக்கோ மோடு எனபது 45 Km/h என வரையறுக்கப்பட்டுள்ளது. சிம்பிள் ஒன் ஸ்கூட்டரில் ஈக்கோ, ரைடு, டாஷ் மற்றும் சோனிக் ஆகிய நான்கு ரைடிங் மோடுகளைக் கொண்டுள்ள ஸ்கூட்டரில்  0-40km வேகத்தை எட்டுவதற்கு வெறும் 2.77 விநாடிகளை எடுத்துக் கொள்ளும். ஒன் மின்சார ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் 105km/h ஆகும்.

டிசம்பர் 15 ஆம் தேதி வரவுள்ள டாட் ஒன் தோற்ற அமைப்பில் ஒரே மாதிரியாக அமைந்து குறைந்த ரேஞ்ச் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டிருக்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.