திருவள்ளூர் பெருமாள் கோயில் திருவிளக்கு பூஜை: தீராத நோய்களைத் தீர்த்து வைக்கும் வைத்திய வீரராகவர்!

திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீஅஹோபில மடம் ஆதீன பரம்பரை மிராசைச் சேர்ந்த ஶ்ரீவீரராகவ ஸ்வாமி கோயில். இங்குதான் வேண்டிய வரம் அருளும் வீரராகவப் பெருமாள் எழுந்தருளி உள்ளார். வைத்திய வீரராகவர் என்ற பெயரில் பெருமாள் இங்கு அழைக்கப்படுகிறார். உடலாலும் மனதாலும் பீடிக்கப்பட்ட தீராத நோய்களை இவர் தீர்த்து வைப்பார் என்பது நம்பிக்கை. னாய் பாதிக்கப்பட்டவர் சிறிய உலோகத் தகட்டில் நோயினால் பாதிக்கப்பட்ட உறுப்பைச் செதுக்கி, நோய் தீருமாறு வேண்டிக்கொண்டு அதை பெருமாளுக்கு சமர்ப்பிப்பார்கள். நோயும் பறந்தோடி விடும் என்பது நம்பிக்கை.

தவத்தில் சிறந்த சாலிஹோத்ர முனிவரை இங்கு தேடி வந்த பெருமாள், வயோதிகர் வடிவில் வந்து அவரை சோதித்தார். உன்ன உணவு கேட்ட பெருமாளுக்கு முனிவர், எல்லா உணவையும் அளித்து பசியாற்றினார். பிறகு உண்ட களைப்புத் தீர ‘படுக்க எவ்வுள்’ என்றார். எங்கே படுப்பது என்று கேட்டவருக்கு முனிவர் தம் ஆசிரமத்தைக் காட்டினார். அங்கேப் பெருமாளாகக் கிடந்தது சயனித்தார் என்கிறது தலவரலாறு. எவ்வுள் என்று கேட்டதால் ஊர் பெயர் எவ்வுள்ளூர் என்றும் எவ்வுட்கிடந்தான் என்பதும் பெருமாளின் திருநாமமானது என்றும் கூறுகிறார்கள்.

திருவிளக்கு பூஜை

இப்பகுதியின் அரசன் தர்மசேனனின் மகள் வசுமதியை பெருமாள் தேடிவந்துத் திருக்கல்யாணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அதனால் இது திருமணத் தலமாகவும் போற்றப்படுகிறது. மேலும் இங்குள்ள கோயிலில், திருக்கரங்களில் வில், அம்பு ஏந்தியபடி வீரம் மிக்க எழில்கோலத்தில் அருள்கிறார் ஸ்ரீகோதண்டராமர். பெரும்பாலான ஆலயங்களில் சீதாதேவி, ராமனுக்கு இடப்புறத்தில்தான் காட்சி தருவார். ஆனால், இங்கு ஸ்வாமிக்கு வலப்புறத்தில் அவர் காட்சி தருவதை, ‘கல்யாணத் திருக்கோலம்’ என்று சிறப்பிக்கிறார்கள். இங்கு வந்து வழிபட திருமண யோகம் உண்டாகும்.

முன்பதிவுக்கு: 97909 90404, 044-66802980/07

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!

ஸ்ரீராமன் இங்கு ஸ்ரீகோதண்டராமராக எழுந்தருளியதால், இந்தத் தலம், ‘ஸ்ரீராம க்ஷேத்திரம்’ என்ற பெயரில் முன்பு அழைக்கப்பட்டது. பிற்காலத்தில்தான் வீரராகவப் பெருமாள் இந்தத் தலத்தில் எழுந்தருளினார் என்றும், ஸ்ரீவீரராகவரே ஸ்ரீராமரின் அம்சம்தான் என்றும் விவரிக்கிறார்கள் உள்ளூர் பக்தர்கள். `ராகவன்’ என்றால் அது ரகுவம்சத்தில் வந்த ராம பிரானைத்தான் குறிக்கும் இல்லையா!

ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருமாலின் 108 வைணவ தேசங்களில் இது 59-வது திவ்ய தேசம். இங்குள்ள மூலவருக்கு சந்தனத் தைலத்தில் மட்டுமே திருமஞ்சனம் நடைபெறும். சுமார் 15 அடி நீளம், 5 அடி உயரத்தில் வீரராகவப் பெருமாள் சயன கோலத்தில் அருள்பாலிக்கிறார். மார்க்கண்டேய புராணத்தில் இக்கோயில் பற்றிய குறிப்புகள் உண்டு. விஜயகோடி விமானம் இங்குள்ளது. இவ்வூர் விஷாரண்யம் என்றும் அழைக்கப்படுகின்றது.

திருவள்ளூர் வீரராகவப் பெருமாள்

இங்குள்ள ஹிருதாபநாசினி தீர்த்தத்தில் நீராடினால், எண்ணத்தால் உருவான பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை. மேலும் இது நோய் தீர்க்கும் திருக்குளமாகவும் விளங்குகிறது.

முன்பதிவுக்கு: 97909 90404, 044-66802980/07

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!

பெருமைமிக்க இந்த திருவள்ளூர் வீரராகவ பெருமாள் ஆலயத்தில் நடைபெறும் திருவிளக்கு பூஜையில் கலந்து கொள்ள மங்கல வாழ்வு, செல்வவளம், சுக்கிர யோகம், நாகதோஷ நிவர்த்தி, ஆரோக்கியம் யாவும் கிட்டும். ஆயுள் பலத்தை அதிகரிக்கும் இந்த ஆலயத்தில் திருவிளக்கு பூஜை எனும் அற்புதமான வழிபாட்டில் நீங்களும் கலந்து கொண்டு சங்கல்பிக்கலாம்!

லோக சுபீட்சத்துக்காகவும் சக்தி விகடன் வாசகர்களின் குடும்ப நலனுக்காகவும் 8-12-23 வெள்ளிக்கிழமை மாலை 6 மணி அளவில் சக்திவிகடனும் ஸ்ரீஅஹோபில மடம் ஆதீன பரம்பரை மிராசைச் சேர்ந்த ஶ்ரீவீரராகவ ஸ்வாமி ஆலய நிர்வாகமும் இணைந்து திருவிளக்கு பூஜை நடத்த உள்ளது. அனைவரும் கலந்து கொண்டு பெருமாளின் அருளைப் பெறுங்கள்! ஆலய நிர்வாகத்தின் வழிகாட்டுதலுடன் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நீங்காத செல்வமும், நிறைந்த ஆரோக்கியமும் நீண்ட வாழ்வும் அருளும் இந்த சந்நிதியில் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டால் உங்கள் வேண்டுதல்கள் யாவும் நிறைவேறும் என்பது நிச்சயம்.

எல்லா காரியத்திலும் வெற்றி கிடைக்கவும், சொந்த வீடு அமைய, கல்யாண வரம் கைகூட, கடன் பிரச்னைகள் நீங்கிட, பிள்ளைப் பாக்கியம் கிடைக்க… என சகல பிரார்த்தனைகளை முன்வைத்து நடைபெறவுள்ளது இந்த விளக்குப் பூஜை.

இடம்: ஸ்ரீஅஹோபில மடம் ஆதீன பரம்பரை மிராசைச் சேர்ந்த ஶ்ரீவீரராகவ ஸ்வாமி தேவஸ்தானம், உடையவர் யாத்ரீகர்கள் நிவாஸ் (ராஜாதோட்டம்), திருவள்ளூர் – 602001

முன்பதிவுக்கு: 97909 90404, 044-66802980/07

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!

திருவள்ளூர் வீரராகவப் பெருமாள்

விளக்குப் பூஜையில் கலந்துகொள்ளும் வாசகியர், விளக்கு, விளக்கை வைப்பதற்கான தட்டு, மணி, பஞ்சபாத்திரம், உத்தரணி, கற்பூர ஆரத்தித் தட்டு ஆகியவற்றை எடுத்து வந்தால் போதுமானது. மற்றபடி பூஜைக்குத் தேவையான திரி, எண்ணெய், தாம்பூலப் பொருள்கள், நைவேத்தியம் முதலானவற்றை நாங்களே வழங்குகிறோம்.

அற்புதமான இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள விரும்பும் வாசகியர் இங்கு தரப்பட்டுள்ள link-ஐ பயன்படுத்தி உரிய விவரங்களைப் பூர்த்தி செய்து முன்பதிவு செய்யலாம் அல்லது கீழ்க்காணும் எண்ணில் தொடர்பு கொண்டு, உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் விவரங்களுடன் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள எவ்வித கட்டணமும் கிடையாது.

முன்பதிவுக்கு: 97909 90404, 044-66802980/07

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.