உங்கள் வாட்ஸ்அப் சாட்களை Backup செய்ய பணம் செலுத்த வேண்டுமா?

வாட்ஸ்அப் இலவசமாக பயன்படுத்தக் கூடிய ஒரு செயலி. அதனால்தான் உலகில் மிகவும் பிரபலமான சாட்டிங், மெசேஜிங் செயலியாகவும் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் அனைத்து சாட்களையும் cloud backups செய்வதை முற்றிலும் இலவசமாகவே அனுபவித்து வந்தனர். உங்கள் போனை தொலைத்துவிட்டாலோ அல்லது புதிய ஸ்மார்ட்போனுக்கு மாற்றினாலோ உங்கள் அனைத்து சாட்களையும் மீண்டும் பெற இந்த பேக்அப்கள் அவசியமானவை.

உங்கள் வாட்ஸ்அப் மெசேஜூகள் மற்றும் வரலாற்றை பேக்கஅப் செய்ய, ஆண்ட்ராய்டில் உங்கள் வாட்ஸ்அப் செயலியுடன் கூகுள் கணக்கை இணைக்க வேண்டும். இருப்பினும் இந்த பேக் அப்கள் கூகுளின் கிளவுடில் சேமிக்கப்பட்டு உங்கள் கணக்குடன் இணைக்கப்பட்டிருந்தாலும், அவை உங்கள் கூகுள் கிளவுட் பதிவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தன. ஆனால் இப்போது இதில் மாற்றம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

நவம்பரில் அறிவிக்கப்பட்ட மாற்றத்தில், 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து, ஆண்ட்ராய்டில் உள்ள வாட்ஸ்அப் பேக்அப்கள் உங்கள் கூகுள் கிளவுட் சேமிப்பு பதிவின் எண்ணிக்கையில் சேர்க்கப்படும். தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் ஒவ்வொரு கூகுள் கணக்கிற்கும் 15 ஜிபி இலவச சேமிப்பிடத்தை வழங்குகிறது. ஆனால் உங்கள் கூகுள் டிரைவ், கூகுள் ஃபோட்டோஸ் மற்றும் ஜிமெயில் கணக்கில் 15 ஜிபிக்கு மேல் இருந்தால் கூடுதல் சேமிப்பிடத்திற்கு பணம் செலுத்த வேண்டியிருக்கும்.

“வாட்ஸ்அப் பேக்அப்கள் விரைவில் கூகுள் கணக்கு கிளவுட் சேமிப்பு அளவின் எண்ணிக்கையில் சேர்க்கப்படும். மற்ற மொபைல் தளங்களில் வாட்ஸ்அப் பேக்அப்கள் கையாளப்படும் விதத்தை ஒத்ததாகவே இது இருக்கும்,” என்று கூகுள் தனது விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. ஐபோன்களில் உள்ள வாட்ஸ்அப் பேக்அப்கள் iCloud சேமிப்பு அளவின் எண்ணிக்கையில் சேர்க்கப்படுவதை இது குறிப்பிடுகிறது.

உங்களிடம் பல கிகாபைட் வாட்ஸ்அப் வரலாறு இருந்தால், உங்கள் கூகுள் கிளவுட் பயன்பாட்டை 15 ஜிபிக்கு மேல் தள்ளி, 200 ஜிபி அளவிற்கு உயர்த்துவதைத் தவிர்க்க சில வழிகள் இருக்கின்றன. அதன்படி, உங்கள் வாட்ஸ்அப் சாட்களை காப்பகப்படுத்துவதற்கான மாற்று வழியை நீங்கள் தேடலாம். அதாவது, லேப்டாப், டேட்டா சேமிப்பு செயலி உள்ளிட்டவைகளை பயன்படுத்தி சேமிக்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.