மோசமான பார்ம்… பிசிசிஐ அதிருப்தி – சமரசம் செய்ய ஸ்ரேயாஸ் எடுத்த அதிரடி முடிவு

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஸ்ரேயாஸ் உலக கோப்பை போட்டிகளில் சிறப்பாக விளையாடினார். ஆனால், தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. அவரின் பேட்டிங் படுமோசமாக இருந்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம்பிடிக்க புதிய யுக்தி ஒன்றை கையில் எடுத்துள்ளார். அதாவது, சொந்த மண்ணான மும்பை மைதானத்தில் நடக்கும் ரஞ்சி டிராபி தொடரில் மும்பை அணிக்காக விளையாட முடிவு செய்துள்ளார். இதன் மூலம் தனது ஃபார்மை நிரூபித்து, இங்கிலாந்து தொடரில் இடம் பிடிக்கலாம் என திட்டம் போட்டுள்ளார்.

ஸ்ரேயாஸ் ஐயர் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் 4 இன்னிங்ஸ்களில் 41 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் அவரது ஃபார்ம் குறித்து கேள்வி எழுந்தது. மேலும், ஆசிய ஆடுகளங்களுக்கு வெளியில் ஸ்ரேயாஸ் ஐயர் தாக்கு பிடிக்க முடியாது என்ற விமர்சனங்கள் எழுந்தன. இந்த விமர்சனங்களை களைந்து, இங்கிலாந்து தொடரில் இடம் பிடிக்க ஸ்ரேயாஸ் ஐயர் ரஞ்சி டிராபி தொடரில் மும்பை அணிக்காக விளையாட முடிவு செய்துள்ளார். மும்பை மைதானம் அவருக்கு மிகவும் பரிச்சயமானது. மேலும், மும்பை அணி தற்போது ரஞ்சி டிராபி தொடரில் முதலிடத்தில் உள்ளது.

ஸ்ரேயாஸ் ஐயர் தரப்பில் இருந்து வெளியான தகவலின்படி, அவர் இந்திய ஏ அணிக்காக விளையாட விருப்பமில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இந்திய ஏ அணி இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக 2 பயிற்சி போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த போட்டிகளில் விளையாடி டெஸ்ட் தொடருக்கான பயிற்சி மேற்கொள்ளாமல், ரஞ்சி டிராபியில் விளையாட ஸ்ரேயாஸ் ஐயர் முடிவு செய்துள்ளார்.

ஸ்ரேயாஸ் ஐயர் தனது ஃபார்மை நிரூபிக்க முடியுமா? இங்கிலாந்து தொடரில் இடம் பிடிக்க முடியுமா? என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன. பிசிசிஐ தேர்வுக்குழு ஸ்ரேயாஸ் ஐய்யரின் பேட்டிங் பார்மை பார்த்துவிட்டு இறுதிகட்ட முடிவை எடுக்கும். ஒருவேளை அவரின் பேட்டிங் பார்ம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றால் ஸ்ரேயாஸ் இடத்துக்கு வேறொருவரை அணியில் சேர்க்கவும் பிசிசிஐ தயாராக இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.