மலேசிய ஓபன் பேட்மிண்டன்: சாத்விக் – சிராக் ஷெட்டி ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

கோலாலம்பூர்,

மலேசிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி – சிராக் ஷெட்டி ஜோடி, சீனாவின் ரென் ஜியாங் யு – ஹீ ஜிங் டிங் ஜோடியுடன் மோதியது.

இந்த ஆட்டத்தில் சாத்விக் – சிராக் ஷெட்டி ஜோடி, 21-11, 21-8 என்ற நேர்செட்டில் சீனாவின் ரென் ஜியாங் யு – ஹீ ஜிங் டிங் ஜோடியை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.

பெண்கள் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா – தனிஷா கிரஸ்டோ ஜோடி, ஜப்பானின் ரின் இவானகா – கி நகானிஷி இணையுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் அஸ்வினி – தனிஷா ஜோடி,15-21, 13-21 என்ற நேர்செட்டில் ஜப்பானின் ரின் இவானகா – கி நகானிஷி இணையிடம் தோல்வியடைந்தது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.