இங்கிலாந்து அணியால் ஒரு போட்டியை கூட ஜெயிக்க முடியாது – காரணத்தை சொல்லும் கங்குலி!

India National Cricket Team: இந்தியா – இங்கிலாந்து (IND vs ENG Test Series) அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி (Sourav Ganguly) கூறுகையில்,”இந்தியா தொடரை நிச்சயம் வெல்லும். அது, 4-0 அல்லது 5-0 என்ற கணக்கில் வெற்றி பெறுமா என்பதே பார்க்க வேண்டிய விஷயம். ஒவ்வொரு டெஸ்ட்டும் தீர்க்கமானதாக இருக்கும்.

பாஸ்பால் இங்கு பொருந்தாது

இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து நன்றாக பேட்டிங் செய்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம். இந்திய மண்ணில் 230 அல்லது 240 ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற முடியாது. அவர்கள் 350 அல்லது 400 ரன்கள் எடுத்திருந்தால், அவர்கள் இந்தியாவை வீழ்த்தியிருக்கலாம். ஆனால் அவர்களால் அதைச் செய்ய முடியவில்லை. இங்கிலாந்துக்கு இது கடினமான தொடர். 

பழைய காலத்து ஆஸ்திரேலியாவைத் தவிர வேறு எந்த அணியாலும் இங்கு எந்தத் தாக்கத்தையும் உருவாக்க முடியவில்லை. பாஸ்பால் என்பது போட்டியை வேகமாக விளையாடும் அணுகுமுறையாகும். இந்தியாவில் சுழலும் விக்கெட்டுகள் இருப்பதால், இங்கு பாஸ்பால் பொருந்தாது” என்றார்.

டி20 உலகக் கோப்பை: இந்தியாவுக்கு சாதகம்

மேலும், அடுத்து வரும் டி20 உலகக் கோப்பை குறித்தும் அதில் இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு குறித்து கங்குலி பேசினார். அதில், “டி20 உலகக் கோப்பையில் (ICC T20 World Cup 2024) இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. சமீபத்தில், ஓடிஐ உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா விளையாடியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது பரிதாபமாக இருந்தது. போட்டி முழுவதும் மிகச் சிறந்த முறையில் விளையாடிய பிறகு அவர்கள் தோல்வியடைவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை, ஆனால் விளையாட்டு என்றால் அது நடக்கத்தான் செய்யும்.

இந்தியா மிகவும் நல்ல அணியாக உள்ளது. மேற்கிந்தியத் தீவுகள், அமெரிக்கா போன்ற நாடுகளின் சூழல் இந்தியாவைப் போல் இருப்பதால் இந்தியாவுக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்கும். உலகக் கோப்பைக்கான ஆயத்தப் போட்டியாக ஐபிஎல் இருக்கும்.

இளம் வீரர்கள்…

இந்தியாவின் இளம் வீரர்கள் குறித்து அவர் பேசுகையில், “அவர்கள் இந்தியாவுக்காக விளையாட தகுதியானவர்கள். இளைஞர்கள் வருமானம் பெற இது ஒரு நல்ல வாய்ப்பு. ஜெய்ஸ்வால் நன்றாக விளையாடி உள்ளார், சுப்மன் கில் தொடர்ந்து நன்றாக விளையாட வேண்டும். பேட்டிங் வரிசையில் இடம் பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. 

என்னைப் பொறுத்தவரை, யஷஸ்வி ஜெய்ஸ்வால் அனைத்து ஃபார்மட்டுக்கான வீரர். காயத்தில் இருந்து மீண்டு வரும்போது ரிஷப் பண்ட் ஒரு பெரிய வீரராக இருப்பார். ஷ்ரேயாஸ் ஐயர், பண்ட் மற்றும் சுப்மான் கில் ஆகியோர் நிறைய மாற்றியமைக்க வேண்டும்,” என்றார். 

Edged and taken!

A wicket early in the morning from Jasprit Bumrah with the old ball

Rehan Ahmed departs and England are 339/7

Follow the match  https://t.co/HGTxXf8b1E#TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/oZlRCGyQM1

— BCCI (@BCCI) January 28, 2024

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.