இந்த மொபைல் டிஸ்பிளே உடையவே உடையாது… Tempered Glass தேவையே இல்லை – முழு விவரம்!

Honor X9b 5G: ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களுக்கு முதல் தலைவலியே அதனை பாதுகாப்பாக வைத்திருப்பதுதான். குறிப்பாக, மொபைல் கீழே விழுந்து திரை உடைந்துவிடுமோ என்ற அச்சமும் பல பேருக்கு இருக்கும். இதனால், விலை உயர்ந்த டெம்பெர்ட் கிளாஸை (Tempered Glass) பலரும் பயன்படுத்துவார்கள். உடைந்த டெம்பெர்ட் கிளாஸ் உடனும் மொபைலை நீண்ட நாள்கள் பயன்படுத்துவதை பார்த்திருப்பீர்கள். 

அந்த வகையில், டெம்பெர்ட் கிளாஸ் போடவே தேவையில்லாத ஒரு மொபைல் இந்தியாவில் வரும் பிப்.15ஆம் தேதி அறிமுகமாக உள்ளது. இதன் டிஸ்பிளேவில் உள்ள Airbag தொழில்நுட்பம், மொபைல் கீழே விழுந்தாலும் திரைக்கு எந்தவித பாதிப்போ, கீறலோ வராது என தெரிவிக்கப்பட்டது. இதன்மூலம், RIP Tempered Glass என்ற ஹேஷ்டாக்கில் அந்நிறுவனம் விளம்பரப்படுத்தி வருகிறது. 

Honor நிறுவனம் அதன் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை வரும் பிப்ரவரி 15ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது. Honor X9b 5G என்ற இந்த மொபைல், இந்தியாவின் முதல் அல்ட்ரா பவுன்ஸ் டிஸ்ப்ளேவுடன் வருவதாக கூறப்படுகிறது. இது ‘Airbag’ தொழில்நுட்பத்திற்கான ஆதரவைக் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய அமேசான் நிறுவனத்தில் விற்பனை பட்டியலில் போடப்பட்டுள்ள Honor X9b 5G மொபைல் பற்றிய சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவில் Honor நிறுவனத்தின் சமீபத்திய ஸ்மார்ட்போன் 12ஜிபி RAM மற்றும் 256ஜிபி இன்டர்நெல் ஸ்டோரேஜ் உடன் வரலாம் என கூறப்படுகிறது. சன்ரைஸ், ஆரஞ்சு ஆகிய கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

மேலும், Honor X9b 5G மாடல் ஆனது இந்தியாவில் Honor Choice Earbuds X5E மற்றும் 12 மாத திரை மற்றும் பின் அட்டைக்கான உத்தரவாதத்துடன் கிடைக்கப்பெறலாம் என்றும் கூறப்படுகின்றன. Honor X9b 5G ஆண்ட்ராய்டு 13 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கக்கூடியது.  Honor 90 5G போன்றது அமேசானுக்கு பிரத்யேகமாக இருக்கலாம்.

ஹானர் X9b 5G அம்சங்கள்

Honor நிறுவனம் ஏற்கனவே Honor X9b 5G உலகளாவிய வேரியண்டை அறிமுகப்படுத்தியது. இந்திய வேரியண்ட் அதன் உலகளாவியளவில் காணப்படும் அம்சங்களைப் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Honor X9b 5G மாடலின் உலகளாவிய வேரியண்ட் 1200 × 2652 பிக்சல்கள் ரெஸ்சோல்யூஷன் மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் (Refresh Rate) 6.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. அனைத்து கிராபிக்ஸ் மற்றும் கடினமான பணிகளையும் கையாள அட்ரினோ 710 GPU உடன் இணைக்கப்பட்ட Qualcomm Snapdragon 6 Gen 1 SoC பிராஸஸர் மூலம் ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது.

மேலும், Honor X9b 5G மொபைலில் 108MP முதன்மை கேமரா, 5 MP வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 2MP மேக்ரோ ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 16MP செல்ஃபி கேமரா உள்ளது. இது வீடியோ கால் உள்ளிட்ட வசதிகளுக்கும் பயன்படும். இந்த ஸ்மார்ட்போனில் 5,8000 mAh மெகா பேட்டரி உள்ளது. மேலும், இதன் 35W சார்ஜர் வழியாக வேகமாக சார்ஜ் செய்யலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.