எம்ஜி காமெட் இவி, ZS EV கார்களின் விலை குறைந்தது

நூற்றாண்டை கொண்டாடும் வகையில் மொரீஸ் காரேஜஸ் (Morris Garages) நிறுவனத்தின் காமெட் எலக்ட்ரிக் காரின் விலையை 99,000 வரை குறைத்துள்ளது. மேலும் குறைந்த விலை ZS EV எக்ஸ்கூட்டிவ் வேரியண்ட் என கொண்டு வந்துள்ளது.

முன்பாக ரூ.7.98 லட்சத்தில் கிடைத்து வந்த எம்ஜி காமெட் இவி விலை ஆரம்ப விலை தற்பொழுது 6.99 லட்சம் ஆக குறைக்கப்பட்டுள்ளது.  முன்பாக கிடைத்து வரும் எக்ஸ்சைட் வேரியண்ட்டை விட ரூ.3.90 லட்சம் குறைவாக துவக்க நிலை மாடலாக சேர்க்கப்பட்டுள்ள எம்ஜி ZS EV எக்ஸ்கூட்டிவ் விலை ரூ.18.98 லட்சத்தில் துவங்குகின்றது.

எம்ஜி இசட்எஸ் இவி காரில் உள்ள 50.3kWh பேட்டரி பேக் மூலம் அதிகபட்சமாக 461km (ICAT) ரேஞ்ச் வெளிப்படுத்துவதுடன் அதிகபட்சமாக 176hp மற்றும் 353Nm டார்க் உற்பத்தி செய்யும் முன்புறம் பொருத்தப்பட்ட மின்சார மோட்டார் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

  • எம்ஜி ZS EV Executive’ வேரியண்ட் ₹ 18.98 லட்சத்தில் ஆரம்பம்
  • ரூ.99,000 வரை குறைக்கப்பட்டு எம்ஜி காமெட் EV இப்போது ₹ 6.99 லட்சத்தில் ஆரம்பம்
  • எம்ஜி ஹெக்டர் ₹ 14.94 லட்சத்தில் துவங்கும் நிலையில் பெட்ரோல் வேரியண்ட் ரூ.6,000 மற்றும் டீசல் வேரியண்ட் ரூ.19,000 குறைக்கப்பட்டுள்ளது.
  • எம்ஜி க்ளோஸ்டெர் விலை ரூ.1.31 லட்சம் குறைக்கப்பட்டு ரூ. 37.49 லட்சத்தில் துவங்குகின்றது.
  • எம்ஜி ஆஸ்டர் 9.98 லட்சத்தில் துவங்கும் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

எம்ஜி Comet EV காரின் பவர் 42 PS மற்றும் 110 Nm டார்க் வெளிப்படுத்தும் 17.3 kWh பேட்டரி பேக் மூலம் சிங்கிள் சார்ஜில் 230 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்துகின்றது.

அதிகரித்த உள்நாட்டு உதிரிபாகங்கள், நீண்ட கால சரக்கு ஒப்பந்தங்கள், விநியோகச் சங்கிலி மேம்பாடு மற்றும் நீண்ட கால மூலப் பொருட்களின் விலையை பகுத்தறிவு செய்தல் ஆகியவற்றால் இது சாத்தியமானது” என விலை குறைப்பு குறித்து எம்ஜி மோட்டார் இந்தியாவின் துணை நிர்வாக இயக்குநர் கௌரவ் குப்தா குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.