ஸ்ரீசக்ர நவாவரண ஹோமம்: எதிரிகள் பணிய எண்ணியவை ஈடேற சங்கல்பியுங்கள்! 40 நாள்களில் பலன் தரும் அதிசயம்!

17-2-2024 திண்டுக்கல் செம்பட்டி அன்னை ஸ்ரீஆதிசக்தி கோயிலில் நடைபெறும் ஸ்ரீமகாவித்யா ஸ்ரீசக்ர நவாவரண ஹோமத்தில் எதிரிகள் பணிய எண்ணியவை ஈடேற சங்கல்பியுங்கள்! 40 நாள்களில் பலன் தரும் அதிசயம்!

ஸ்ரீசக்ர நவாவரண ஹோமம்

ஸ்ரீசக்ர மந்திரம் ஸ்லோகம் சொல்லி, ஸ்ரீசக்ர வடிவில் அம்மனை வழிபட்டால் எதிர்ப்புகள் அனைத்தும் அடங்கும், எதிரிகள் பின்வாங்கி உங்களிடமிருந்து விலகுவர். காரியத்தில் இருந்த தடைகள் விலகும். எண்ணியவை ஈடேறும். உடல்-மன ரீதியான பிரச்னைகள் சரியாகும். தரித்திரம் விலகி செல்வவளம் சேரும் என்பது ஆன்றோர்களின் வாக்கு.

அதிலும் உடனடிப் பலனை அளிக்கும் ஸ்ரீசக்ர நவாவரண ஹோமம் செய்து அம்பிகையை சரண் அடைந்தால் உங்கள் ஏழேழ் தலைமுறைக்கும் காவலாக நிற்பாள் அந்த ஆதிபராசக்தி. ஸ்ரீசக்ரத்தை மனதார யார் பூஜித்தாலும் கைமேல் பலனுண்டு. அவர்களுக்கு அம்பிகையின் பரிபூரண அனுக்கிரஹம் கிடைக்கும். மகாமேருவின் திருத்தப்பட்ட வடிவமே ஸ்ரீசக்ரம். லிங்கபுராணத்தில் ஸ்ரீசக்ரத்தின் பெருமைகள் விளக்கப்பட்டுள்ளன. புஷ்ப தந்தர் எனும் ஞானியே அம்பிகையின் ஸ்ரீசக்ரத்தை ஞானத்தால் கண்டு வரைந்து அருளினார். ஸ்ரீஆதிசங்கரரின் குருவான குருகவுடபாதர் அதை பிரபலமாக்கினார் என்பர்.

ஸ்ரீசக்ரம்

காது, கழுத்து, உள்ளங்கை, திருப்பாதம் என அம்பிகையின் திருவுடலில் ஸ்ரீசக்ரம் அமைந்து அம்பிகையின் அம்சமாகவேத் திகழ்கின்றன. ஸ்ரீசக்ரத்தை அம்பிகையாக வழிபடும்போது அனைத்து தெய்வங்களையும் ஒரே இடத்தில் வழிபடுகிறோம். ஸ்ரீ சக்ரத்தில் வீற்றிருக்கும் தேவி ஸ்ரீலலிதா திரிபுரசுந்தரியை ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம், சௌந்தர்ய லஹரி, தேவி மகாத்மியம், நவரத்தின மாலை, அபிராமி அந்தாதி போன்றவை புகழ்கின்றன. ஸ்ரீசக்ரம் என்பது சிவசக்தியின் ஒன்பது சுற்று அரண்மனை. இது ஸ்ரீமாதாவின் மஹா சாம்ராஜ்யம். இங்கு விஷ்ணு, கணபதி, முருகன் தொடங்கி காளி, பைரவர் வரை அனைத்து தெய்வங்களும் வீற்றிருப்பர்.

பவிஷ்யோத்தர புராணத்தில், அம்பிகை வழிபாட்டில் ஆர்வமுள்ளோர் ஸ்ரீசக்ரத்தை வழிபடலாம் எனப்படுகிறது. அதிலும் ஸ்ரீசக்ரத்தை ஆராதிக்கும் ஸ்ரீசக்ர நவாவரண ஹோமம் செய்து சங்கல்பம் செய்து கொண்டால் உங்கள் வீட்டில் மன அமைதி, ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆயுள் பலம், மங்கல வாழ்வு, நீடித்த புகழ், போன்றவை நிறைந்திருக்கும் எனப்படுகிறது. சகல காரியங்களிலும் வெற்றி, எதிரிகள் பணிந்து போகும் நிலையை இந்த ஹோமம் செய்விக்கும் எனப்படுகிறது.

ஸ்ரீமகாவித்யா ஸ்ரீசக்ர நவாவரண ஹோமம்

ஸ்ரீசக்ரத்தை சுற்றி 64 கோடி தேவதைகள் வீற்றிருக்கிறார்கள் என்கின்றன புனித நூல்கள். ஸ்ரீசக்ரம் 9 ஆவரணங்களை அதாவது சுற்றுக்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு சுற்றிலும் அதாவது ஒவ்வொரு ஆவரணத்துக்குள்ளும் ஒரு ஆவரண தேவதை, யோகினி தேவதை, முத்ரா தேவதை, பரிவாரம் செய்யும்

சக்தி தேவதை, சித்தியை தரும் அணிமா, லகிமா, மகிமா, ஈசத்வ, வசித்வ, பிரகாம்ய, புத்தி, கிச்சா, பிராப்தி 9 சித்தி தேவதைகள் வசிக்கின்றனர். ஒரு சிறப்பான நாளில் இந்த நவாவரண சுற்றுக்கும் ஒவ்வொரு சுற்று வீதமாக சிறப்பு பூஜைகள் செய்து ஹோமத்தால் நமஸ்கரிப்பதே ஸ்ரீசக்ர நவாவரண ஹோமம். 9 ஆவரணத்துக்கும் பூஜைகள் முடிந்த பிறகு பிந்து ஸ்தானத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீஆதிபராசக்தியை மகிழ்விப்பதே நவாவரண பூஜை மற்றும் ஹோமம் எனப்படும். இது மிக விசேஷமான பலன்களைத் தரவல்லது. பெரும் பாக்கியமும் ஞானமும் பெற்றவர்கள்தான் இந்த ஹோமத்தை செய்ய முடியும்.

அதனாலேயே உங்கள் சக்தி விகடன் திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியில் அமைந்துள்ள அன்னை ஸ்ரீஆதிசக்தி மங்களாம்பிகைதேவி கோயிலில் இந்த ஸ்ரீசக்ர நவாவரண ஹோமத்தை நடத்தவுள்ளது. 17-2-2024 சனிக்கிழமை காலை வளர்பிறை அஷ்டமி கார்த்திகை நட்சத்திரம் கூடிய சுப வேளையில் காலை 10.30 மணிக்கு மேல் பச்சமலையான்கோட்டை கிராமம், செம்பட்டியில் அமைந்துள்ள அன்னை ஜெகன்மாதாதேவி ஸ்ரீஆதிமகாசக்தி மங்களாம்பிகைதேவி யோக தவநிலை திருக்கோயிலில் நடைபெறும் ஸ்ரீமகாவித்யா ஸ்ரீசக்ர நவாவரண ஹோமத்தில் சங்கல்பித்துக் கொண்டால் தோஷ நிவர்த்தி, குழந்தைப்பேறு, ஆரோக்கியம், ஆயுள், செல்வம், மணப்பேறு, புகழ் உள்ளிட்ட சகல நன்மைகளும் கிட்டும். நிம்மதியான வாழ்வு, உறவுப் பிரச்னைகள் அற்ற சூழல், சொத்து தொடர்பான தொல்லைகள் நீங்கும் என்கிறார்கள். செல்வவளம் பெருகவும், நிம்மதி கொண்ட நீண்ட வாழ்வு பெறவும் இந்த சிறப்பு மிக்க ஹோமம் நிச்சயம் அருளும் என்கிறார்கள்.

ஸ்ரீமகாவித்யா ஸ்ரீசக்ர நவாவரண ஹோமம்

அன்னை ஆதிபராசக்தியாக, ஸ்ரீஜகன்மாதாவாக, ஸ்ரீயோக மாயாதேவியாக கொலுவீற்றிருக்கும் ஒரே அற்புத, அதிசயக் கோயில் திண்டுக்கல் மாவட்டம், பச்சமலையான்கோட்டை கிராமம், செம்பட்டியில் அமைந்துள்ள, அன்னை ஜெகன்மாதாதேவி ஸ்ரீஆதிமகாசக்தி மங்களாம்பிகைதேவி யோக தவநிலை திருக்கோயிலே என்கிறார்கள் பக்தர்கள். இங்கு ஸ்ரீயோக மாயாதேவி ஜீவமுக்தி பீடத்தில், தேவாதிதேவர்களும், சித்தர்களும் போற்றும் ஸ்ரீமகாவித்யா ஸ்ரீசக்ர நவாவரண ஹோமம் நடைபெறுவது வழக்கம். உலக உயிர்களின் வேண்டுதல்கள் யாவையும் நிறைவேற்றும் அற்புத வழிபாடு ஸ்ரீமகாவித்யா ஸ்ரீசக்ரஹோமம் என்கின்றன ஆன்மிக நூல்கள்.

மங்கல வாழ்வும் மனையறம் விளங்கவும் உதவும் இந்த யாகத்தில் பங்கு கொள்ளுங்கள். தீர்க்க சுமங்கலியாக விளங்கவும் உங்கள் குலம் விளங்கவும், உங்கள் குலதெய்வம் யாரென்று தெரியாதவர்கள் இந்த ஹோமத்தில் கலந்து கொள்ள அடையாளம் காண்பர் என்பது நம்பிக்கை. ஆன்மிக அன்பர்கள் இந்த சிறப்பு ஹோமத்தில் கலந்து கொண்டு பலன் பெற வேண்டும், அவர்கள் எல்லாவித வளங்களையும் அடைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம்.

ஸ்ரீமகாவித்யா ஸ்ரீசக்ர நவாவரண ஹோமம்

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான   சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட ஹோமப் பிரசாதம் (அம்மனின் ரட்சை, விபூதி, மற்றும் குங்குமம்) அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் – புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி வழிபாடுகள் வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.