‘Ask QX’ சாட்ஜிபிடிக்கு போட்டியாக அறிமுகம் | தமிழ் உட்பட 12 இந்திய மொழிகளில் பயன்படுத்தலாம்

சென்னை: தமிழ் உட்பட 12 மொழிகளில் இயங்கும் ‘Ask QX’ எனும் ஜெனரேட்டிவ் ஏஐ அசிஸ்டன்ட் டூல் அறிமுகமாகி உள்ளது. இது சாட்ஜிபிடிக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது குறித்து விரிவாக பார்ப்போம்.

கடந்த 2022-ம் ஆண்டின் இறுதி முதல் உலக மக்கள் மத்தியில் ஜெனரேட்டிவ் ஏஐ பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது. இதற்கு சாட்ஜிபிடி ஜெனரேட்டிவ் ஏஐ சாட்பாட் தான் காரணம். அதையடுத்து பல்வேறு சாட்பாட்கள் அறிமுகமாகின. டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்தி வரும் மக்கள், இதன் ஊடாக தங்களுக்கு வேண்டிய கேள்விகளை கேட்டு பதிலை அறிந்து கொள்கின்றனர். அதோடு போட்டோ, ஆடியோ போன்றவற்றையும் பயனர்கள் தங்களது கற்பனைக்கு ஏற்ப ஏஐ சாட்பாட்கள் மூலம் உருவாக்கலாம்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் ‘Ask QX’ எனும் ஜெனரேட்டிவ் ஏஐ அசிஸ்டன்ட் டூல் அறிமுகமாகி உள்ளது. சுமார் 100 மொழிகளில் பயனர்கள் இதனோடு தொடர்பு கொண்டு, தங்களுக்கு வேண்டிய தகவல்களை பெற முடியும். இதில் தமிழ் உட்பட இந்தியாவின் 12 மொழிகளும் அடங்கியுள்ளன. கட்டணமில்லா மற்றும் சந்தா கட்டணம் செலுத்தி என பயனர்கள் இதனை பயன்படுத்த முடியும். இப்போதைக்கு இதில் டெக்ஸ்ட் வழியில் பேசலாம். இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலம் இதனை பயன்படுத்தலாம்.

QX லேப் ஏஐ எனும் நிறுவனம் இதனை வடிவமைத்துள்ளது. சாட்ஜிபிடி போலவே இதையும் பயன்படுத்தலாம். க்ரியேட்டிவ், ஸ்டேண்டர்ட் மற்றும் ஃப்ரொபஷனல் என மூன்று வகையில் இதை பயன்படுத்த முடியும். விரைவில் இதன் ஊடாக ஆடியோ, வீடியோ மற்றும் போட்டோவை அடிப்படையாகக் கொண்டு பயனர்கள் தங்களுக்கு வேண்டிய தகவலை பெற முடியும். அதற்கான அம்சங்கள் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.