ஜியோ வச்சிருந்தா ஒரே ஜாலி தான்… 12 ஓடிடிகள் இலவசம்… இப்போது கூடுதல் டேட்டாவும்!

JioTV Premium Plans: ஜியோ நிறுவனம் அதன் தொடக்க கால கட்டத்தில் சிம் உள்பட பல சேவைகளை இலவசமாக வழங்கி வந்தது. தொடர்ந்து, அந்நிறுவனம் தகவல் தொலைத்தொடர்பு துறையில் நன்கு வேரூன்றிய பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக அதன் சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கத் தொடங்கியது எனலாம். மேலும், அதன் சேவையையும் நல்ல முறையில் அளித்து வந்தது. 

ஜியோவின் உச்சகட்ட வளர்ச்சி என்பது பல தொலைத்தொடர்பு நிறுவனங்களை துறையை விட்டு வெளியேற வைத்தது எனலாம். ஏர்டெல் நிறுவனம் மட்டும் ஜியோ உடன் ஈடுகொடுத்து போட்டிப்போட்டுக் கொண்டிருக்கிறது. வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் தற்போது ஒன்றாகிவிட்டது. ஜியோ, ஏர்டெல் ஆகியவை 5ஜி சேவைக்கே சென்றுவிட்ட நிலையில், வோடபோன் ஐடியா இன்னும் 4ஜியை தாண்டவில்லை.

JioTV பிரீமியம் ரீசார்ஜ் திட்டங்கள்

பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் தற்போதுதான் 4ஜி சேவையிலேயே காலடி எடுத்து வைத்துள்ளது. இப்படி ஜியோவின் வருகை பல நிறுவனங்களின் தலையெழுத்தையே மாற்றிவிட்டது. குறிப்பாக, ஜியோ நிறுவனம் பல சேவைகளையும் சலுகை விலையிலும் வழங்கி வருகிறது. அந்த வகையில், JioTV சேவை அதன் வாடிக்கையாளர்களுக்கு நீண்ட நாள்களாக இலவசமாகவே வழங்கப்பட்டு வந்தது.

சில மாதங்களுக்கு முன் JioTV பிரீமியம் திட்டங்களை ஜியோ அதன் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியது. JioTV பிரீமியத்தில் ரூ.148, ரூ.398, ரூ.1198, ரூ.4498 என நான்கு திட்டங்கள் உள்ளன. அதே நேரத்தில், இந்த திட்டங்களின் கீழ், கூடுதல் டேட்டாவை ஜியோ நிறுவனம் வழங்குகிறது. 

என்னென்ன ஓடிடிகள் இலவசம்?

இந்த கூடுதல் டேட்டா என்பது, பயனர்களுக்கு கூடுதல் தரவு அணுகலை வழங்குகிறது. ஜியோ நிறுவனத்தின் JioTV பிரீமியம் திட்டம் ஒரே நேரத்தில் பல OTT செயலிகளின் சந்தாவை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ரீசார்ஜ் திட்டங்களை ஜியோவில் நீங்கள் தேடுகின்றீர்கள் என்றால், JioTV பிரீமியம் திட்டங்கள் சிறந்த ஆப்ஷனாகும்.

குறிப்பாக, JioTV பிரீமியத்தின் ரூ.1198 ரீசார்ஜ் திட்டம் சுமார் 12 ஓடிடிகளுக்கு இலவச அணுகலை வழங்குகிறது. பிரைம் வீடியோ மொபைல், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், சோனிலிவ், ஜீ5, ஜியோசினிமா பிரீமியம், லைன்ஸ்கேட் பிளே, டிஸ்கவரி பிளஸ், டாக்குபே, எபிக்ஆன், சன்நெக்ஸ்ட், Hoichoi, Chaupal, Planet Marathi மற்றும் Kachha Lannka போன்றவை இதில் உள்ளது. JioTV, JioCloud வசதிகளும் இந்த இடத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. 

JioTV பிரீமியம்… போனஸ் டேட்டா

JioTV பிரீமியம் ரூ.1198 திட்டத்துடன் போனஸ் டேட்டாவை ஜியோ நிறுவனம் வழங்குகிறது. இதன் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டாவை பயனர்கள் அணுகலாம். அதன்படி, இந்த திட்டம் உங்களுக்கு 84 நாட்களுக்குள் 168 ஜிபி டேட்டாவை தருகிறது.

போனஸ் டேட்டா என்றால், 18GB டேட்டாவை கூடுதலாக ஜியோ நிறுவனம் இப்போது இந்த திட்டத்தில் வழங்குகிறது. இதன்படி மொத்தம் பழைய 168 ஜிபி உடன் இதையும் சேர்த்தால், மொத்தம் 186ஜிபி டேட்டா இந்த திட்டத்தில் கிடைக்கும். 

பலன்கள்

தினசரி டேட்டா ஒதுக்கீடு தீர்ந்த பிறகு, இணைய வேகம் 64Kbps ஆக குறையும். மேலும், நிறுவனத்தின் இந்த திட்டம் வரம்பற்ற 5G டேட்டாவை வழங்குகிறது. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால், ஜியோ செயலி மூலம் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே கூடுதல் டேட்டா பலன்கள் கிடைக்கும். இந்த திட்டத்தில், பயனர்கள் வரம்பற்ற குரல் அழைப்பு வசதியைப் பெறுகின்றனர். மேலும், இந்த திட்டத்தில் பயனர்கள் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் வசதியையும் பெறலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.