தோனி அணிந்து இருக்கும் ஸ்பெஷல் ஃபிட்னஸ் பேண்ட்! இதில் இவ்வளவு சிறப்பம்சங்களா?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனமான தோனி ஐபிஎல் 2024 போட்டியில் களமிறங்க தயாராகி வருகிறார். இந்த ஆண்டுடன் தோனி ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளார், இதனால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளின் மீது ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். மார்ச் மாதம் தொடங்கும் ஐபிஎல் 2024 போட்டிகள் மே கடைசி வாரம் வரை நடைபெற உள்ளது. இந்த ஆண்டு இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடைபெறுவதால் ஏப்ரல் மாதங்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறாது. துபாயில் விடுமுறையில் இருந்த தோனி தற்போது ஐபிஎல் போட்டிகளுக்காக பயிற்சியை தொடங்கியுள்ளார். சமீபத்தில் தோனி ஜிம்மில் இருக்கும் ஒரு புகைப்படம் வெளியானது ,அதில் ஒரு வித்தியாசமான பிட்னஸ் பேண்டை தோனி அணிந்திருந்தார்.

WHOOP ஃபிட்னஸ் பேண்டின் சிறப்பம்சங்கள்

தோனி WHOOP பேண்ட் 4.0 என்ற ஃபிட்னஸ் பேண்டை அணிந்துள்ளார். சாதாரண ஸ்மார்ட்வாட்ச்சில் இல்லாதா பல சிறப்பம்சங்கள் இந்த பிட்னஸ் ட்ராகரில் உள்ளது. WHOOP பேண்ட் ஆனது உடலின் ஆரோக்கியம், உடற்பயிற்சி மற்றும் நமது பிட்னஸ்க்கு தேவையான அனைத்து அம்சங்களையும் வழங்குகிறது. இந்த பேண்ட் நமது தூக்கம், மன அழுத்தம், ஆரோக்கியம் ஆகியவற்றை துல்லியமாக கண்காணிக்கிறது.  பல விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் இணைந்து இந்த பேண்டை உருவாக்க பல முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாக இதன் நிறுவனர் தெரிவித்துள்ளார். 

இந்த WHOOP ஸ்மார்ட் பேண்டில் ஸ்மார்ட்வாட்சில் இருப்பது போல எந்த டிஸ்பிளேயும் இருக்காது.  இதனை மொபைலில் உள்ள ஆப்பின் மூலம் பயன்படுத்த முடியும்.  ஒருமுறை நீங்கள் இந்த பேண்டை அணிந்தவுடன் சிறிது நாட்கள் உங்களின் தினசரி நடவடிக்கைகளை இந்த பேண்ட் கண்காணிக்கும். பிறகு இதன் ஆப் மூலம் உடலுக்கு தேவையான விஷயங்களை காட்டத் தொடங்குகிறது. WHOOP பேண்ட் உடலில் உள்ள பல வகையான தரவுகளைக் தினசரி கண்காணிக்கிறது. இதயத் துடிப்பு, தினசரி தூக்க அளவு வேண்டும், நீங்கள் எவ்வளவு நேரம் தூங்குனீர்கள், இன்னும் உடலுக்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படுகிறது போன்றவற்றை பற்றி கூறுகிறது. தினசரி எவ்வளவு கலோரிகள் வெளியேறுகிறது என்பதையும் இந்த பிட்னஸ் பேண்ட் கூறுகிறது.

தோனி மட்டுமின்றி கிரிக்கெட் வீரர்கள் பலர் இதை அணிந்துள்ளனர்.  விராட் கோலி, முகமது சிராஜ், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட பிரபலங்களும், இந்தியாவில் உள்ள சில தொழில் அதிபர்களும், சினிமா நட்சத்திரங்களும் இதனை கையில் கட்டி உள்ளனர்.  விளையாட்டு வீரர்களுக்கு இந்த பேண்ட் மிகவும் உதவியாக இருக்கும். ஏனெனில், கிரிக்கெட் மைதானத்திற்குள் எந்த வித ஸ்மார்ட் கேஜெட்டும் கொண்டு செல்ல அனுமதி இல்லை. WHOOP பேண்ட்டில் எந்த விதமான டிஸ்பிளேவும், பட்டன்களும் கிடையாது. கையில் கட்டுவதற்கும் மிகவும் சிறிய அளவில் இருக்கும். மேலும் குறைந்த எடை கொண்டால், கையில் கட்டி இருப்பதே தெரியாது.  இதனை குளிக்கும் போது கூட கையில் கட்டி கொள்ளலாம். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.