11 ஆயிரத்துக்குள் இப்படியொரு 5ஜி போன்.. 50MP கேமரா, டால்பி ஸ்பீக்கர்..!

இப்போதைய ஸ்மார்ட்போன் டிரெண்ட் 5ஜி மொபைல்கள் தான். அந்த மொபைல்கள் தான் சிறந்தது என்ற நிலையும் உருவாகிவிட்டது. எல்லோரும் 5ஜி போன் வேண்டும் என்றே கேட்கிறார்கள். ஏனென்றால் அதில் தான் லேட்டஸ்ட் அம்சங்கள் அத்தனையும் சேர்க்கப்பட்டிருக்கிறது.  அதேநேரத்தில் பட்ஜெட் விலையில் இருக்கும் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல டிமாண்ட் இருக்கிறது. 5ஜி மொபைல் விலை அதிகமாக இருக்கும் என வாடிக்கையாளர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் வெறும் 11 ஆயிரம் ரூபாய்க்கு நல்ல அம்சங்களுடன் சூப்பர் மொபைலை அறிமுகப்படுத்தியிருக்கிறது மோட்டோ. 

மோட்டோரோலா நிறுவனம் தான் இந்த சிறந்த பட்ஜெட் 5ஜி போனை மார்க்கெட்டில் களமிறக்கியிருக்கிறது. மோட்டோரோலா என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது ஃபீச்சர் போன்கள்தான். ஆனால், 5ஜி ஸ்மார்ட்போன்களின் வருகைக்குப் பிறகு, அவற்றின் மார்க்கெட் கணிசமாகக் குறைந்துள்ளது. 5ஜி ஸ்மார்ட் போன்கள் விஷயத்தில் மோட்டோரோலா பீச்சர் போன்கள் சற்று பின்தங்கிவிட்டன. இப்போது மீண்டும் அந்த சந்தையில் தங்களின் அடையாளத்தை உருவாக்க மோட்டோரோலா பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பட்ஜெட் விலையில் 5ஜி போன்களை இந்தியாவில் களமிறக்கியுள்ளது மோட்டோரோலா. 

இந்த மோட்டோ ஜி34 5ஜி ஸ்மார்ட்போனின் எம்ஆர்பி ரூ.13,999. ஆனால், பிளிப்கார்ட் ரூ.3 ஆயிரம் உடனடி தள்ளுபடியுடன் ரூ.10,999 விற்பனை செய்கிறது. உங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்தால், தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களில் கூடுதலாக ரூ.1000 தள்ளுபடியும் கிடைக்கும். மேலும் இந்த போனில் வங்கி சலுகைகளும் உள்ளன. அவற்றை பயன்படுத்திக் கொண்டால் இன்னும் விலை குறையும். மோட்டோரோலா ஜி34 5ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களும் அற்புதமாக உள்ளது. 6.5 இன்ச் எச்டி பிளஸ் உடன் வருகிறது. அதாவது, ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே. இந்த போனில் 1600*720 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட டிஸ்ப்ளே உள்ளது.

இந்த மோட்டோ 5ஜி போன் 2.2 ஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 695 5ஜி ஆக்டா கோர் செயலி மற்றும் ஆண்ட்ராய்டு 14 உடன் வருகிறது. இதில் 13, 5ஜி பேண்டுகள் உள்ளன. இது பட்ஜெட் போன் என்பதால், இந்த மாடல் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பகத்தைக் கொண்டுள்ளது. கேமராவைப் பொறுத்தவரை, 50MP + 2MP பின்புற கேமரா மற்றும் 16MP செல்ஃபி கேமரா உள்ளது. இது டால்பி சரவுண்ட் ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது. இந்த 5G ஸ்மார்ட்போன் 5000 mAh பேட்டரி திறனுடன் வருகிறது. பட்ஜெட் விலையில் 5ஜி மொபைல் வேண்டும் என்பவர்களுக்கு இது ஏற்றது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.