உங்கள் ஸ்மார்ட்போன் அதிகம் ஹீட் ஆகிறதா? இந்த தவறுகளை சரி செய்யுங்கள்!

Smartphone Overheating Problem: தற்போதைய சூழலில் ஸ்மார்ட்போன் இன்றியமையாத ஒன்றாக மாறி உள்ளது. போன் பேச, மெயில் அனுப்ப, வேலை பார்க்க, முக்கிய செய்திகளை தெரிந்து கொள்ள, சமூக ஊடகங்களை பயன்படுத்த, கேம் விளையாட என  நாள் முழுக்க மொபைல் போன் நமக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.  ஸ்மார்ட்போன் இல்லை என்றால், சிலருக்கு பைத்தியமே பிடித்துவிடும்.  காலையில் எழுந்ததில் இருந்து, இரவு தூங்கும் வரை நமது கைகளில் ஸ்மார்ட்போன் இருக்கும்.  குறைந்த விலை தொடங்கி, அதிக விலை வரை ஸ்மார்ட்போன் விற்பனையில் உள்ளது.  ஆனால் நாம் நமக்கே தெரியாமல் செய்யும் சில தவறுகளால் ஸ்மார்ட்போன் அதிக ஹீட் ஆகிறது.  இந்த பிரச்சனை நிறைய பேருக்கு இருப்பதாக தெரிகிறது. 

ஸ்மார்ட்போன் அதிகம் வெப்பம் அடைந்தால் போனின் செயல்திறன் குறையும்.  மேலும், அதிக வெப்பம் ஸ்மார்ட்போனின் ஆயிள் காலத்தை குறைத்துவிடும். பேட்டரி, போனின் செயல்பாடு ஆகியவற்றில் பிரச்சனையை உண்டு செய்கிறது.  நமக்கே தெரியாமல் நாம் செய்யும் சில தவறுகளால் இந்த ஹீட் பிரச்சனைகள் ஏற்படுகிறது.  ஸ்மார்ட்போனின் ஏற்படும் அதிக வெப்பத்தை குறைக்க என்ன செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

– நீங்கள் அதிக நேரம் போனில் கேம் விளையாடினாலோ அல்லது வீடியோக்கள், படங்களை பார்த்தாலோ  உங்கள் ஸ்மார்ட்போனில் அதிக ஹீட் ஏற்படலாம். இது போன்ற அதிகமான பயன்பாட்டின் போது, மொபைலில் உள்ள கிராபிக்ஸ் கார்டில் ஏற்படும் அதிக அழுத்தம் காரணமாக இவ்வாறு சூடாகிறது. 

– இந்த தவறை பலரும் தினசரி செய்கின்றனர்.  ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யும் போது பயன்படுத்த கூடாது. 
 சார்ஜ் செய்யும் போது மொபைலை பயன்படுத்துவதால், அதில் உள்ள பேட்டரி அதிகமாக ஹீட் ஆகிறது.  இதனால் பேட்டரி சீக்கிரமே கெட்டுவிடும்.

– உங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய, அதன் ஒரிஜினல் சார்ஜரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.  மாறாக மற்ற சார்ஜரை எப்போதும் பயன்படுத்த கூடாது.  மற்ற போனின் சார்ஜரைப் பயன்படுத்தினால் பேட்டரி அதிக வெப்பமடைந்து போனின் தரத்தை பாதிக்கும்.

– உங்கள் ஸ்மார்ட்போனை அதிக நேரம் வெயிலில் வைத்து பயன்படுத்த வேண்டாம். அதே போல அதிகமாக சூடாக இருக்கும் இடத்திலும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.  இந்த சமயத்தில் போன் அதிகம் ஹீட் ஆகி வெடிக்கும் நிலை ஏற்படலாம்.  

– அதே போல ஸ்மார்ட்போனின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் அப்ளிகேஷன்களை எப்போதும் அப்டேட் செய்து பயன்படுத்துங்கள்.  சில ஆப்ஸ் மொபைல் பேட்டரியை அதிகம் பயன்படுத்தும்.  அடுத்தடுத்த அப்டேட்டுகளில் இதற்கான தீர்வுகளும் இருக்கும்.  மேலும் உங்கள் ஸ்மார்ட்போனுக்கு நல்ல பேக் கேஸை பயன்படுத்தவும்.  

– வைரஸ்கள் மற்றும் மால்வேர்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கிறதா என்பதை சரி பார்த்து கொள்ளுங்கள். இணையத்தை பயன்படுத்தும் போது இவை மொபைலில் எளிதாக வர வாய்ப்புள்ளது. வைரஸ்கள் மற்றும் மால்வேர்கள் போனின் செயல்திறனை அதிக பாதிக்கும்.  அதே போல நீங்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்தாத போது பின்னால் இயங்கும் தேவையில்லாத ஆப்ஸை கிளோஸ் செய்யுங்கள்.  இதனால் அதிக வெப்பமடையும் பிரச்சனைகள் ஏற்படலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.