கே. ஐ. யு மற்றும் ஹொரைஸன் தனியார் பல்கலைக்கழகங்களில் பிள்ளைகளுக்கு அரச வங்கிகளினால் தொடர்ந்தும் வட்டியில்லாக் கடன் வசதி – கல்வி அமைச்சர்  

கே. ஐ. யு மற்றும் ஹொரைஸன் தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் பிள்ளைகளுக்கு அரச வங்கிகளினால் வழங்கப்படும்  வட்டியில்லாக் கடன் வசதிகளை தொடர்ந்தும் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேம்ஜயந்த இன்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த வாய் மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அதற்காக அமைச்சரவை தற்போது தயாராகி வருவதாகவும், காணப்படும் அதற்கான வேலைகள் எதிர்வரும் இரண்டு மூன்று வாரங்களுக்குள் பூர்த்தி செய்யப்பட்டு ஒப்புதல் பெற்றுக்கொள்வதுடன் தற்போது அந்த நிறுவனங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் தொடர்ந்தும் கல்விச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு சந்தர்ப்பத்தை வழங்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

 தொடர்ந்தும் உரையாற்றிய  அமைச்சர்; தற்போதைய ஜனாதிபதி 2017ஆம் ஆண்டில் இக்கடன் கடன் யோசனை முறையை ஆரம்பித்தார். ஏழாவது குழுவினர்  இம்முறை உள்ளெடுக்கப்படுவர்.

 
தற்போது வரை 6 குழுக்கள் நிறைவு செய்துள்ளன. அண்ணளவாக  5000 பேரளவில் தனியார் பல்கலைக்கழகங்களில்  வட்டியில்லாக் கடன் வசதிகளை இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிகளின் ஊடாக பிள்ளைகளுக்கு பட்டம் பெறுவதற்கு வழங்கப்பட்டது.
இந்தப் பிரச்சினையை  இதற்கு முன்னரும் எதிர்கட்சித் தலைவர் முன்வைத்தாலும் அதன் பின்னர் ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடமெபெற்றது.

ஜனாதிபதியின் செயலாளரும், இலங்கை வங்கியின் பிரதி  பிரதம முகாமையாளர் உட்பட பலரும், திறைசேரி அதிகாரிகளும், இணைந்து இதற்கான தீர்வைப் பெற்றுத் தந்தார்கள். இந்நிறுவனங்களுக்கு புதிதாக உள்ளெடுக்கப்பட்ட குழுவிற்கு கடன் வழங்காமை தாமதமாவதற்கு பிரதான காரணம் முதலாவது  மற்றும் இரண்டாவது  குழுவில் 200 பேரளவில் கடனை மீளச் செலுத்தாதிருப்பதாகும்.

 முதலாவது மற்றும் இரண்டாவது குழுக்கள் பட்டம் முடியும் போது கொரோனாத் தொற்றுப் பிரச்சினை ஏற்பட்டதாக நான் இக்கலந்துரையாடலில் தெளிவுபடுத்தினேன்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்களுக்கு பல்வேறு சிக்கல்கள் காணப்பட்டன. 200 என்றால் சராசரியாக பெரிய எண்ணிக்கை அல்ல. வங்கியின் மீளப்பெற்றுக்கொள்ளும் திணைக்களத்தினால் இது தொடர்பாக அறவீட்டைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிதாக  பிணையாளிகள் இருவர் வங்கியினால் கோரி கடன் பணத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கடன் நிதி தொடர்பாக பூர்த்தி செய்து கடந்த வாரத்தில் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

அது தவிர அமைச்சரவைத் தீர்மானத்தை நானும், நிதி அமைச்சினால் கையெழுத்திடப்பட்டு தயாராக உள்ளது.

கல்வி அமைச்சில் தனியார் பல்கலைக்கழகங்களின் மேலதிக செயலாளருக்கு ஊடக இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களுக்குத் தெரியப்படுத்துவதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.