401 கிமீ ரேஞ்சில் அறிமுகமான பக்கா ஸ்டைலிஸ்ஷான மின்சார கார் – விலை எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்கள் மார்க்கெட் அதிகரித்து வருகிறது. வாடிக்கையாளர்கள் தற்போது படிப்படியாக எலெக்ட்ரிக் கார்களின் பக்கம் திரும்பி வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், உலகெங்கிலும் உள்ள பெரிய நிறுவனங்களும் தங்கள் பிரபலமான மின்சார கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்துகின்றன. இந்த வரிசையில், சீனாவின் முன்னணி மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான BYD, இந்தியாவில் மிட் ரேஞ்ச் அளவிலான சிறிய மின்சார SUV-ஐ அறிமுகப்படுத்த முடவு செய்திருக்கிறது. இந்த மின்சார கார் சீனாவில் யுவான் UP என்றும், ஐரோப்பாவில் BYD Atto 2 என்றும் அழைக்கபடுகிற மின்சார காராக இருக்கும். BYD சமீபத்தில் டெஸ்லாவை உலகின் கார் விற்பனையில் முந்தியது. 

புதிய மின்சார கார் எப்படி இருக்கும்? 

இந்த கார் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டால், ஏற்கனவே இங்கு விற்பனையில் உள்ள MG ZS உடன் சந்தையில் போட்டியிடும். எதிர்காலத்தில், BYD-ன் வரவிருக்கும் மின்சார கார், வரவிருக்கும் மின்சார SUVகளான Tata Curve EV, Maruti Suzuki eVX, Mahindra BE.05 மற்றும் Kia EV3 ஆகியவற்றுக்கு மார்க்கெட்டில் செம போட்டியை கொடுக்கும். புதிய எஸ்யூவியின் வடிவமைப்பைப் பற்றி நாம் பேசினால், அதற்கு கருப்பு நிற குளோஸ் கிரில் மற்றும் வைட் ஆங்கில் ஹெட்லைட்கள் இருக்கும். அதேசமயம் காரின் சக்கரம் ஏரோடைனமிக் மாடலில் இருக்கும். சார்ஜிங் சாக்கெட் முன்பக்கத்தின் வலது பக்கத்தில் இருக்கும்.

எவ்வளவு கிலோமீட்டர் தூரம் வரை செல்ல முடியும்?

விரைவில் அறிமுகமாக இருக்கும் காரின் பின்புற வடிவமைப்பில் இன்பினிட்டி லூப் எல்இடி டெயில் விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன. காரின் தோற்றம் ஸ்பாய்லருடன் ஸ்போர்ட்டியாக இருக்கும். அதே நேரத்தில், காரின் கேபினில் 12.8 இன்ச் சுழற்றக்கூடிய இன்ஃபோடெயின்மென்ட் டச் ஸ்கிரீன் மற்றும் 8.8 இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் ஸ்கிரீன் வழங்கப்படலாம். புதிய காரில் இரண்டு பேட்டரி விருப்பங்கள் இருக்கும். இதில், 32 kWh பேட்டரி அதன் வாடிக்கையாளர்களுக்கு 301 கிலோமீட்டர் வரம்பை வழங்கும். பெரிய 45.1 kWh பேட்டரி 401 கிலோமீட்டர் ஓட்டும் வரம்பை வழங்க முடியும். இருப்பினும், இந்தியாவில் கார் அறிமுகம் குறித்து நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வரவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.