அமேசான் பிரைம் பயனர்கள் கவனத்திற்கு! இனி இதற்கும் தனி கட்டணம்!

அமேசான் பிரைம் ஆனது, டால்பி விஷன் எச்டிஆர் மற்றும் டால்பி அட்மோஸ் சரவுண்ட் அதன் அடிப்படை சந்தாவில் இருந்து நீக்கியுள்ளது.  மேலும் பயனர்கள் இவற்றை தொடர்ந்து அனுபவிக்க விரும்பினால் அதிக கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.  அமேசான் பிரைம் மற்றும் நெட்ஃபிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி நிறுவனங்கள் தினசரி பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து வருகின்றன. தற்போது ஓடிடியின் பயன்பாடு அதிகரித்து வந்தாலும், அந்த நிறுவனங்கள் நஷ்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.  ஹாட்ஸ்டார், அமேசான் போன்ற நிறுவனங்கள் பணியாளர்களை நீக்கும் நடவடிக்கைகளையும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மாத சாந்தா, மற்றும் வருட சந்தா தொகையிலும் குறிப்பிட்ட மாற்றங்களை செய்துள்ளன.

ஓடிடி நிறுவனங்கள் தங்கள் சந்தா திட்டங்களின் மூலம், பயனர்களிடமிருந்து அதிக லாபத்தை பெற முயற்சி செய்து வருகின்றன. இதற்காக தொடர்ந்து பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், அமேசான் பிரைம் இத்தகைய முடிவை எடுத்துள்ளது.  அமேசான் டால்பி விஷன் எச்டிஆர் மற்றும் டால்பி அட்மோஸ் சரவுண்ட் மாதாந்திர சந்தா திட்டங்களுக்கும் கொடுத்து வந்தது. இந்நிலையில் அதனை தற்போது நீக்கி உள்ளது.  மேலும் பயனர்கள் விளம்பரமில்லாத சேவையுடன், இந்த அம்சங்களை பெற விரும்பினால் அதிக கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது. 

கடந்த ஜனவரி மாதம் முதல் அமேசான் நிறுவனம் படங்களுக்கு இடையில் விளம்பரங்களை கொண்டு வந்தது.  மேலும் இப்போது US, UK, ஜெர்மனி மற்றும் கனடாவில் உள்ள பயனர்கள் விளம்பரம் இல்லாமல் படங்களை பார்க்க கூடுதலாக $2.99 ​​செலுத்த வேண்டும். இப்போது, ​​விளம்பரமில்லா அனுபவத்திற்காக, கூடுதல் $2.99 ​​செலுத்தினால், டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மாஸிற்கான அணுகலையும் நீங்கள் பெற முடியும்.  எல்ஜி, சோனி மற்றும் சாம்சங் போன்ற பிராண்டுகளின் டிவிகளில் டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மோஸ் ஆகியவற்றிக்கு பதிலாக, எச்டிஆர்10 மற்றும் டால்பி டிஜிட்டல் 5.1 போன்ற அம்சங்கள் அமேசான் பிரைமில் காட்டி உள்ளது.  

அமேசான் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் இதனை உறுதிப்படுத்தி உள்ளார்.  “Dolby Vision மற்றும் Dolby Atmos ஆகியவை கூடுதல் கட்டணம் செலுத்தும் சந்தாதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.  இந்தியாவில் இந்த மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படுமா என்பது குறித்து தற்போது எந்த தகவலும் வெளியாகவில்லை. தற்போது, ​​இந்தியாவில் உள்ள பயனர்கள் ஒரு வருட காலத்திற்கு எந்த வித தடங்கலும் இல்லாமல் அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்பை பெற ரூ.1,499 செலுத்தி வருகின்றனர். இது தவிர ஒரு மாதத்திற்கு ரூ.299 திட்டம் அல்லது மூன்று மாதங்களுக்கு ரூ.599 போன்ற திட்டங்களும் உள்ளது.

இந்தியாவில் உள்ள பயனர்களுக்கு தற்போது அமேசான் பிரைமில் டால்பி விஷன் மற்றும் டால்பி அட்ஸ் ஆதரவு கிடைக்கிறது. Netflix நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாடுகளில், ஒரு மாதத்திற்கு $6.99 க்கு விளம்பரம் இல்லாத சந்தா திட்டத்தை வழங்குகிறது, ஆனால் 1080p வரை மட்டுமே வீடியோ தரத்தை வழங்குகிறது.  நெட்ஃபிக்ஸ் இந்தியாவில் விளம்பர ஆதரவு திட்டத்தை எப்போது அறிமுகப்படுத்தும் என்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை, மேலும் கூடுதல் சந்தாதாரர்களை பெற நெட்ஃபிக்ஸ் அதன் குறைந்த விலை சந்தா திட்டங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.