OnePlus 11R 5G: 16GB ரேம், 50MP கேமரா மொபைலுக்கு 3 ஆயிரம் விலையை குறைத்த ஒன்பிளஸ்

OnePlus 11R 5G விலை குறைப்பு:

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான OnePlus, தனது 2023 ஆம் ஆண்டு ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான OnePlus 11R 5G-யின் விலையை 3000 ரூபாய் வரை குறைத்துள்ளது. OnePlus 12R 5G-யின் அறிமுகத்திற்குப் பிறகு இந்த விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில்  OnePlus 11R 5G மொபைலுக்கு போட்டியாக இருக்கும் மாடல்களின் விற்பனையை கருத்தில் கொண்டும் ஒன்பிளஸ் நிறுவனம் இந்த விலை குறைப்பை அமல்படுத்தியிருக்கிறது.  

OnePlus 11R மொபைலின் புதிய விலை 

OnePlus 11R 5G (8GB + 128GB) ஸ்மார்ட்போன் விலை குறைப்புக்கு முன்பு 39,999 ரூபாய் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதேபோன் இப்போது 37,999 ரூபாபய் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மொபைலுக்கு 2 ஆயிரம் ரூபாய் விலை குறைக்கப்பட்டுள்ளது. OnePlus 11R 5G (16GB + 256GB) மொபைல் 44,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த மொபைல் இப்போது 3 ஆயிரம் ரூபாய் விலை குறைப்புக்கு பிறகு 41,999 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 

OnePlus 11R 5G முக்கிய அம்சங்கள்:

OnePlus 11R 5G ஸ்மார்ட்போனில் 6.74-இன்ச் FHD+ AMOLED ஸ்கிரீன், Qualcomm Snapdragon 8+ Gen 1 செயலி இருக்கும். கேமரா குவாலிட்டியை பொறுத்தவரையில், 50MP Sony IMX890 பிரைம் கேமரா, 8MP + 2MP துணை கேமராக்கள், 16MP செல்ஃபி கேமரா, 5000mAh பேட்டரி, 100W SuperVOOC வேகமான சார்ஜிங் இருக்கும். 

இந்த மொபைலில் கவனிக்க வேண்டியவை:

OnePlus 11R 5G இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. அதாவது, Galactic Silver மற்றும் Lava Red மாடலில் கிடைக்கும். மேலும், இந்த விலை குறைப்பு தற்காலிகமானதா அல்லது நிரந்தரமானதா என்பது பற்றி OnePlus எந்த தகவலையும் வெளியிடவில்லை. 

யாருக்கெல்லாம் இந்த மொபைல் உகந்தது?

புகைப்படத்தில் ஆர்வம் உள்ளவர்கள், கேமிங் விளையாடுபவர்கள், பட்ஜெட் விலையில் நல்ல மொபைல் எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த மொபைல் வாங்குவது குறித்து பரிசீலிக்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.