ரயிலில் பசித்தால் பிரச்னையில்லை… Swiggy மூலம் உணவு டெலிவரி – முழு விவரம்!

IRCTC Swiggy Food Delivery Partnership: இந்தியாவில் ரயிலில் பயணிப்போரின் எண்ணிக்கை பிற பொது போக்குவரத்துகளை பயன்படுத்தோவரின் எண்ணிக்கையை விட பல மடங்கு அதிகம். காரணம், நாடு முழுவதும் பரந்துவிரிந்திருக்கும் அதன் தடங்களும், சேவைகளும்தான் எனலாம். இந்தியன் ரயில்வே இத்தகைய பெரிய சேவைகளை அளிக்க பல நிறுவனங்களுடன் அது கைக்கோர்த்துள்ளது. 

அந்த வகையில், இந்தியன்ஸ்  ரயில்வேயின் கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் (IRCTC) தற்போது பயணிகள் முன்பதிவு செய்த உணவுகளை டெலிவரியை செய்ய தற்போது உணவு டெலிவரி நிறுவனமான Swiggy உடன் கைக்கோர்த்திருப்பதாக தெரிவித்துள்ளது. இது IRCTC-ஆல் உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த சேவையை IRCTC இணையதளத்தில் மட்டுமே நீங்கள் பெற முடியும். 

இருப்பினும், பெங்களூரு, புவனேஷ்வர், விசாகப்பட்டினம், விஜயவாடா ஆகிய நான்கு ரயில் நிலையங்களில் மட்டுமே IRCTC – Swiggy இந்த சேவைகளை வழங்குகின்றன. முதல்கட்டமாக இந்த சேவை தொடங்கியிருப்பதால் இந்த குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் மட்டும் உணவு டெலிவரி வழங்கப்படுகிறது. இது வெற்றிகரமாக செயல்படும்பட்சத்தில் படிப்படியாக பல முக்கிய நகரங்களுக்கு விரிவுப்படுத்தப்படும் என தெரிகிறது. 

பயணிகளுக்கு விரைவாகவும், எளிமையாகவும் உணவு டெலிவரி சேவை வழங்கவே இந்த கூட்டணியை ஏற்படுத்தியிருப்பதன் முக்கிய நோக்கம் என இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும், இதுபோன்று மற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் ஏற்படுத்துவது முதல் முறையல்ல என்றும் இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது. கடந்தாண்டு Swiggy நிறுவனத்தை போன்ற மற்றொரு பெரிய உணவு டெலிவரி நிறுவனமான Zomato உடன் இந்தியன் ரயில்வே கைக்கோர்த்தது குறிப்பிடத்தக்கது.

இதுவும் உணவு டெலிவரியை எளிமைப்படுத்தவும், பயணிகளுக்கு வசதியாக்கவுமே இந்த ஒப்பந்தத்தையும் இந்தியன் ரயில்வே மேற்கொண்டது. இதேபோன்று, கடந்தாண்டு அக்டோபரில் Zomato உடன் இந்தியன் ரயில்வே ஒப்பந்தம் செய்து 5 ரயில் நிலையங்களில் இந்த சேவையை வழங்கியது. டெல்லி, பிரக்யராஜ், கான்பூர், வாரணாசி, லக்னோ ஆகிய நகரங்களில் Zomato சேவை அளிக்கப்பட்டு வருகிறது. அதாவது, மேற்குறிப்பிட்ட 9 ரயில் நிலையங்களில் மட்டும் Swiggy, Zomato மூலம் இந்தியன் ரயில்வே உணவு டெலிவரி சேவையை வழங்கி வருகிறது. 

ரயில் பயணிகள் இந்த சேவையை ecatering.irctc.co.in. என்ற இணையதளம் மூலம் பெறலாம். இந்த இணையதளத்தில் ரயிலை தேர்வு செய்ய அதன் பெயரையோ அல்லது அவர்களின் PNR நம்பரையோ தளத்தில் தேடலாம். மேலும், அதன்பின் பயனர்கள் தங்களுக்கு தேவையான உணவுகளை தேர்வு செய்து, பரிவர்த்தனையை நிறைவு செய்து உணவை ஆர்டர் செய்யலாம். 

ஆர்டர் செய்தவுடன் உணவு அருகாமையில் இருக்கும் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்படும். பயணிகள் டெலிவரிக்காக குறிப்பிடப்பட்ட நேரத்தையும் பார்க்க இயலும். Domino’s Pizza, Behroz Biryani போன்ற பல உணவுப் பிராண்டுகளிலும் நீங்கள் உங்களின் உணவுகளை பெறலாம். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.