ஏசி வாங்கும் முன் கவனிக்க! 3 ஸ்டார் ஏசி சிறந்ததா? 5 ஸ்டார் ஏசி சிறந்ததா?

இந்த ஆண்டுக்கான கோடை வெயில் இப்போதே கொளுத்த தொடங்கிவிட்டது என்பதால் எல்லோரும் அறக்க பறக்க ஏசி வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். நீங்களும் வெயிலுக்கு ஏசி வாங்க திட்டமிட்டிருக்கிறீர்கள் என்றால் அதற்கு முன் சில அடிப்படையான விஷயங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். எந்த ஏசியை வாங்கலாம்? 3 ஸ்டார் சிறந்ததா? அல்லது 5 ஸ்டார் சிறந்ததா? என தெரிந்து கொண்டீர்கள் என்றால் எந்த தேவைக்கு எந்த ஏசி-யை வாங்கலாம் என்ற தெளிவு கிடைக்கும். 

1. அறை அளவு:

உங்கள் அறையின் சதுர அடி அளவிற்கு ஏற்ற ஏசியின் திறனை தேர்ந்தெடுக்கவும். சிறிய அறைக்கு 1 டன், நடுத்தர அறைக்கு 1.5 டன், பெரிய அறைக்கு 2 டன் ஏசி பொருத்தமானது. வீட்டிற்கு என்றால் அறையின் அளவை பொருத்து ஒரு டன் கூட போதும். அதுவே பிஸ்னஸ் செய்யக்கூடிய இடம் என்றால் ஒன்றரை டன் ஏசியை வாங்கலாம். 

2. நட்சத்திர மதிப்பீடு:

இதற்கு அடுத்தபடியாக எல்லோருக்கும் எழும் பொதுவான கேள்வி என்னவென்றால் 3 ஸ்டார் ஏசி அல்லது 5 ஸ்டார் ஏசி, இரண்டில் எதை வாங்கலாம் என்பது தான். வீட்டிற்கு மற்றும் குறைவான உபயோகம் மட்டும் இருக்கும் இடங்கள் என்றால் 3 ஸ்டார் ஏசியை வாங்கலாம். கடைகள் மற்றும் 24 மணி நேரமும் உபயோகம் செய்யக்கூடிய இடங்களுக்கு 5 ஸ்டார் ஏசி சிறந்தது. 

3. மின்சார சேமிப்பு 

3 ஸ்டார் அதிக மின்சாரம் உபயோகிக்கும், 5 ஸ்டார் குறைவான மின்சாரம் உபயோகிக்கும் என்பது உண்மை என்றாலும் இரண்டுக்கும் முதலீடு அடிப்படையில் யோசித்தால் இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது. 3 ஸ்டார் ஏசி 33 ஆயிரம் ரூபாய் என்றால் 5 ஸ்டார் ஏசி 43 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. இரண்டுக்கும் இடையே ஆண்டுக்கு செலவாகும் மின்சாரத்தை கணக்கிட்டால் வெறும் ஆயிரத்து 500 ரூபாய்க்குள் தான் வரும். அப்படி இருக்கும்போது வீட்டிற்கு 5 ஸ்டார் ஏசி வாங்கினால் உங்களுக்கான மின்சார சேமிப்பு தொகை பலன் கிடைக்க 5 ஆண்டுகள் கூட ஆகலாம். ஆனால் கடைக்கு 5 ஸ்டார் ஏசி வாங்கினால் இரண்டு ஆண்டுகளில் மின்சார சேமிப்பு தொகை பலன் கிடைக்கும். அந்தவகையில் வீட்டிற்கு 3 ஸ்டார் ஏசி சிறந்தது. 

4. ஏசி வகைகள்

ஸ்பிளிட் ஏசி, ஜன்னல் ஏசி, டூயல் ஸ்பளிட் ஏசி, இன்வெர்டர் ஏசி போன்ற பல வகைகள் உள்ளன. உங்கள் தேவைக்கேற்ப ஏசியின் வகையை தேர்ந்தெடுக்கவும். கம்பெனிகள் என்றால், whirlpool, கேரியர், ப்ளூ ஸ்டார், எல்ஜி ஆகிய ஏசி பிராண்டுகளுக்கு முன்னுரிமை கொடுக்கலாம் என்றாலும் ஒவ்வொரு ஏசியின் விவரக்குறிப்புகள் (Specifications) குறித்த புரிதல் இருக்கும்பட்சத்தில் விருப்பமான கம்பெனிகளில் ஏசியை தேர்வு செய்து கொள்ளுங்கள். 

5. ஏசி அம்சங்கள்

Wi-Fi இணைப்பு, தூசி வடிகட்டி, ஹீட்டர், ஸ்மார்ட் கண்ட்ரோல் போன்ற சிறப்பு அம்சங்களை கொண்ட ஏசி பிராண்டுகளை தேவைக்கேற்ப தேர்ந்தெடுக்கவும்.

6. சர்வீஸ் மற்றும் பராமரிப்பு:

எந்த பிராண்டு ஏசி வாங்கினாலும் உங்களுக்கு ஈஸியாக சர்வீஸ் கிடைக்கும் ஏசிக்களை வாங்கவும். அத்துடன் வாரண்டி விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். ஒரே விவரக்குறிப்புகள் (Specifications) இருக்கும் ஏசியில் எந்த பிராண்டு அதிக வாரண்டி கொடுக்கிறதோ அதனை தேர்வு செய்யுங்கள். 

7. பட்ஜெட்

எல்லாவற்றுக்கும் கடைசியாக உங்கள் பட்ஜெட் மிகவும் முக்கியம். வீட்டிற்கு வாங்குகிறீர்களா? அல்லது வணிக இடத்துக்காக வாங்குகிறீர்களா? என முடிவு செய்து அதற்கேற்ற பட்ஜெட்டில் இருக்கும் ஏசியை தேர்வு செய்து கொள்ளுங்கள். 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.