கார் வாங்க பணம் இல்லையா? இந்த வங்கி 100% கார் கடன் வழங்குகிறது!

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி மின்சார கார்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கார் கடன் வழங்குகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களை அதிகன் ஊக்குவிக்கும் வகையில், பல வங்கிகள் இந்த வகை கார்களுக்கு சிறப்பு கடன் தள்ளுபடியை வழங்கி வருகின்றன. ஒரு இடத்திற்கு செல்ல நடந்து சென்று, பிறகு சைக்கிளில் சென்று, பிறகு இருசக்கர வாகனத்தில் சென்று தற்போது காரில் செல்கிறோம். இரு சக்கர வாகனங்களின் அதிக விற்பனைக்கு பிறகு தற்போது நான்கு சக்கர வாகனங்களின் விற்பனை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.  பல நிறுவனங்களும், வங்கிகளும் கார்களுக்கு சிறப்பு தள்ளுபடியை வழங்கி வருகின்றன. 

பலரும் பெட்ரோல் விலை, மைலேஜ் ஆகிவற்றை மனதில் வைத்து கார் வாங்காமல் இருந்து வருகின்றனர். தற்போது இந்தியாவில் அதிகமாக EV கார்கள் விற்பனை ஆகி வருகிறது. எலக்ட்ரிக் கார்களுக்கு அரசும் மானியம் வழங்குகிறது. இந்த வகை கார்களுக்கு பெட்ரோல் போட வேண்டிய அவசியம் இல்லை, அதிக ஒலி எழுப்பாமல் சுற்றுசூழலுக்கு ஏற்றவாறு இருக்கும் EV கார்களை குறைந்த விலையில் நம்மால் வாங்க முடியும். அதே போல கார் வாங்க முன் பணம் நிறைய செலுத்த வேண்டி இருக்கும். ஆனால் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு எஸ்பிஐ வங்கியானது மலிவு விலையில் கார் கடன் வழங்குகிறது. விண்ணப்பித்த சில தினங்களில் இந்த கடன் ஒப்புதல் ஆகிறது.  

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ மின்சார வாகனங்களை மக்கள் வாங்குவதற்கான சிறப்பு திட்டத்தை தொடங்கியுள்ளது. 21 வயது முதல் 70 வயது வரை உள்ள யாரும் எலக்ட்ரிக் கார்கள் வாங்க கடனுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த வகை கார் கடனை 3 முதல் 8 ஆண்டுகள் வரை எளிதான தவணைகளில் பெற்று கொள்ள முடியும். பெட்ரோல் கார்களுக்கான கடனை விட EV கார்களுக்கான கடனுக்கான வட்டியில் 0.25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மற்றொரு முக்கிய விஷயம் என்னவென்றால், எலக்ட்ரிக் வாகனங்களுக்கு 90 சதவீதம் வரை கடனாக பெறலாம், மேலும் சில வகை எலக்ட்ரிக் கார்களுக்கு 100% வரை கடனை பெற முடியும். இதன் மூலம் எவ்வித முன்பணமும் இல்லாமல் காரை ஒட்டி செல்லலாம்.

பாரத ஸ்டேட் வங்கி ஆனது பெட்ரோல் கார்களுக்கு 8.85 முதல் 9.80 சதவீத வட்டி விகிதத்தில் கார் கடன் வழங்குகிறது. அதே சமயம் எலக்ட்ரிக் கார்களுக்கான 8.75 முதல் 9.45 சதவீதம் வரை வட்டியில் வழங்குகிறது. அதே போல உங்களது வருமானத்தை பொருத்தும் கார்களுக்கான கடனை தீர்மானிக்கிறது.  நீங்கள் ஒரு அரசு ஊழியராக இருந்தால், ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ. 3 லட்சம் சம்பளமாக பெற்றால், உங்கள் ஒரு மாத சம்பளத்தை விட 48 மடங்கு அதிகம் கார் கடனை வழங்குகிறது.  விவசாய குடும்பத்தை சேர்ந்த தனிநபர் அவரது மொத்த வருமானத்தில் இருந்து 3 மடங்கு கடன் பெறலாம். தொழிலதிபர்கள் மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் அவர்களது வருமானத்தில் 4 மடங்கு கடன் பெறலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.