கால் ஹிஸ்டரி ரகசியம்: ஏர்டெல், ஜியோ எண்ணில் எப்படி எடுப்பது?

உங்களிடம் ஜியோ மற்றும் ஏர்டெல் மொபைல் சிம் கார்டு பயன்படுத்தி வருகிறீர்கள் என்றால், அந்த எண்ணுக்கான கால் ஹிஸ்டிரியை செக் செய்து கொள்ளலாம். குறிப்பாக கடந்த 6 மாதத்துக்கான அழைப்பு வரலாற்றை உங்களால் தெரிந்து கொள்ள முடியும். வாடிக்கையாளர்களுக்கு இந்த வசதியை ஏர்டெல் மற்றும் ஜியோ நெட்வொர்க்குகள் கொடுக்கின்றன. இதுவரை ஒரு மாதத்துக்கான கால் ஹிஸ்டிரியை எடுப்பதே சிரமம் என பலரும் நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில் இப்படியான ஒரு வழி இருக்கிறது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் எப்படி கால் ஹிஸ்டிரி எடுப்பது? என்பதை இங்கே பார்க்கலாம். 

ஏர்டெல் எண்ணில் கால் ஹிஸ்டிரியை செக் செய்வது எப்படி? 

ஏர்டெல் வாடிக்கையாளர்கள், கடந்த ஆறு மாதங்களில் உங்கள் அழைப்பு வரலாற்றை மீட்டெடுக்க இரண்டு வசதியான வழிகள் உள்ளன. ஒன்று எஸ்எம்எஸ், மற்றொன்று இணையதளம். 

எஸ்எம்எஸ் வழியாக கால் ஹிஸ்டிரி தெரிந்து கொள்வது எப்படி?

– உங்கள் ஏர்டெல் மொபைலில் மெசேஜ் ஓபன் செய்து அதில் 121 என்ற எண்ணுக்கு நீங்கள் செய்தி அனுப்ப வேண்டும். 
– கன்டென்டு என்ன கொடுக்க வேண்டும் என்றால் “EPREBILL” என டைப் செய்ய வேண்டும். 
– அதில் அழைப்பு விவரங்கள் தேவைப்படும் கால அளவு அல்லது குறிப்பிட்ட தேதிகளைக் குறிப்பிடவும்.
– அழைப்பு விவரங்களைப் பெற உங்கள் மின்னஞ்சல் ஐடியையும் சேர்த்து அனுப்புங்கள்.

ஏர்டெல் இணையதளம் வழியாக:

– ஏர்டெல் இணையதளத்திற்குச் சென்று உங்கள் மொபைல் எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உங்கள் கணக்கில் லாகின் செய்யவும்
– Usage Details’ பகுதிக்குச் செல்லவும்.
– அதில், குறிப்பிட்ட காலத்திற்கான அழைப்புப் பதிவுகளைப் பார்க்கும் ஆப்சன் இருக்கும்.
– விரும்பிய தேதி வரம்பைத் தேர்ந்தெடுத்து, “Submit” என்பதைக் கிளிக் செய்யவும்.
– உங்கள் call history திரையில் காட்டப்படும்.

ஜியோ எண்ணில் அழைப்பு வரலாற்றை பெறுவது எப்படி?

– உங்கள் ஸ்மார்ட்போனில் கூகுள் பிளே ஸ்டோரைத் திறக்கவும்.
– MyJio செயலியை தேடி இன்ஸ்டால் செய்யுங்கள்
– பின்னர் கேட்கும் விவரங்களை கொடுத்து லாகின் செய்யவும்
– ‘My Statement’ பகுதியை அணுகவும்:
– செயலியின் மேல் இடது மூலையில் இருக்கும் மூன்று கிடைமட்ட கோடுகளைக் கிளிக் செய்யவும்.
– மெனுவிலிருந்து “My Statement” விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
– தேதிகளை உள்ளிட்டு கால் ஹிஸ்டிரியை பெற்றுக் கொள்ளுங்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.