அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவரா நீங்கள்? இனி ஸ்விக்கியில் ஆர்டர் செய்து கொள்ளலாம்!

இந்திய ரயில்வேயில் நாளுக்கு நாள் புதிய அப்டேட்கள் வந்து கொண்டுள்ளது.  பயணிகளின் பாதுகாப்பிற்காக பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.  இந்நிலையில், இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசியின் இ-கேட்டரிங் போர்டல் மூலம் பயணிகள் இனி தங்களுக்கு தேவையான உணவை முன்கூட்டிய ஆர்டர் செய்து கொள்ளலாம். இதற்காக இந்தியாவின் முன்னணி உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி இந்திய ரயில்வேயுடன் கூட்டணி சேர்ந்துள்ளது.  நீண்ட தூர ரயில் பயணத்தில் பயணிகள் தங்களுக்கு பிடித்த உணவு சாப்பிடுவதற்காக இந்த சேவை கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  விரைவில் இந்த சேவை ரயில்களில் அமல்படுத்தப்பட உள்ளது.

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) உடன் இணைந்து, இ-கேட்டரிங் போர்ட்டல் மூலம் பயணிகளுக்கு உணவை வழங்க உள்ளது ஸ்விக்கி. இந்த சேவையானது முதற்கட்டமாக பெங்களூரு, புவனேஸ்வர், விஜயவாடா மற்றும் விசாகப்பட்டினம் போன்ற முக்கியமான ரயில் நிலையங்களில் அமல்படுத்தப்பட உள்ளது. “பண்ட்ல் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் மூலம் ஈகேடரிங் சேவை விரைவில் கிடைக்கக்கூடும்” என்று IRCTC தெரிவித்துள்ளது. ரயில் பயணத்தின் போது விருப்பமான உணவை பயணிகள் சாப்பிட, பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்துவதே இதன் நோக்கமாக உள்ளது.  ஸ்விக்கியுடன் இந்த புதிய கூட்டணி, ஐஆர்சிடிசி தனது இ-கேட்டரிங் தளத்தைப் பயணிகளுக்கான உணவு ஆர்டர் மற்றும் டெலிவரி செயல்முறையை ஒழுங்குபடுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.

IRCTC Partners With Swiggy For Pre-Ordered Train Meals. pic.twitter.com/tc8V7Tqfyc

— Marketing Maverick (@MarketingMvrick) February 23, 2024

“ஐஆர்சிடிசி ஆனது பண்டல் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்துள்ளது இ-கேட்டரிங் போர்ட்டல் மூலம் உணவுகளை வழங்குவதற்கும் டெலிவரி செய்வதற்கும் முதல் கட்டமாக பெங்களூரு, புவனேஸ்வர், விஜயவாடா மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய நான்கு ரயில் நிலையங்களில் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது” என்று ஐஆர்சிடிசி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களுடன் ஐஆர்சிடிசி கூட்டு சேர்வது இது முதல் முறை இல்ல.  கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் டெல்லி, பிரயாக்ராஜ், கான்பூர், லக்னோ மற்றும் வாரணாசி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் இதேபோன்ற சேவையை Zomato செய்து வருகிறது.

எப்படி ஆர்டர் செய்வது?

ஐஆர்சிடிசி இ-கேட்டரிங் போர்ட்டல் மூலம், ரயில் பயணத்திற்கான உணவை முன்கூட்டிய ஆர்டர் செய்வது எளிமையான செயல் ஆகும். பயணிகள் தங்கள் பயணத்தில் என்ன உணவு வேண்டும் என்பதை தீர்மானிக்க அவர்களின் PNR எண்ணை உள்ளிட வேண்டும். தங்களுக்கு தேவையான உணவை தேர்வு செய்தவுடன், ஆன்லைனில் பணம் அனுப்பலாம் அல்லது டெலிவரி செய்யும் போது பணத்தை கொடுக்கலாம். ஸ்விக்கியில் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள் பயணிகளின் இருக்கைகளுக்கு நேரடியாக கொண்டுவரப்படும். இது அவர்களின் பயண அனுபவத்தின் வசதியை இன்னும் மேம்படுத்தும். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.