குழந்தைகள் ஆன்லைனில் பாதுகாப்பாக இருக்க 5 டிப்ஸ்

இன்றைய இணைய உலகம் ஆபத்துகளும், ஆபாசங்களும் நிறைந்தவையாக இருப்பதால், அதில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதில் பெற்றோர் கவனம் செலுத்துவது அவசியமாகிறது. அதேநேரம் அவர்கள் அதிக நேரம் ஆன்லைனில் இருப்பதையும் தடுக்க வேண்டும். இது குறித்து என்ன செய்வது என தெரியாமல் இருக்கும் பெற்றோர்கள் இங்கே கொடுப்பட்டிருக்கும் வழிமுறைகளை பின்பற்றுங்கள். 

1. குழந்தைகளிடம் பேசுங்கள்

குழந்தைகளுக்கு ஆன்லைன் குறித்து என்னென்ன விஷயங்கள் எல்லாம் தெரிந்திருக்கிறது என்பதை அவர்களுடன் நீங்கள் கலந்துரையாடும்போது மட்டுமே பெற்றோராகிய உங்களுக்கு தெரியும். நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுக்கும் நீங்கள் எப்படி அவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் அறிவுறுத்த வேண்டும். சொல்லிக் கொடுத்தால் புரியாமல் கூட போகலாம், அதனால் அவர்களுடனேயே ஜாலியாக உரையாடி கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்களில் கவனம் செலுத்தும் வகையில் அவர்களை வழிநடத்துங்கள். 

2. ஸ்கிரீன் டைம் அவசியம்

அவர்கள் எவ்வளவு நேரம் ஆன்லைனில் நேரம் செலவிடுகிறார்கள் என்பதை பெற்றோராகிய நீங்கள் கண்காணிக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி அதற்கு மேல் பயன்படுத்தக்கூடாது என்பதை கண்டிப்புடன் அறிவுறுத்திவிடுங்கள். அதிகநேர சமூக ஊடகங்களில் செலவிடுவது குழந்தைகளுக்கு ஆரோக்கியமானது அல்ல. 

3. தொழில்நுட்பங்களை பயன்படுத்தவும்

குழந்தைகள் ஆன்லைனில் இருக்கும்போது சில செயலிகள் மூலம் அவர்கள் நல்ல கன்டென்டுகளை மட்டும் உபயோகிக்கும் வகையில் பெற்றோர்கள் செட்டிங்ஸ் செய்து வைத்துவிடலாம். தேவையில்லாத விஷயங்கள் அவர்கள் உபயோகிக்கும் மொபைலில் வராமல் இருக்க முன்கூட்டியே தொழிநுட்ப உதவியுடன் தடுத்துவிட முடியும் என்பதால் அதனை பெற்றோராகிய நீங்கள் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். 

4. ஆன்லைன் செயல்பாட்டை கண்காணித்தல்

அவர்கள் உபயோகிக்கும் கணிணிகளை வீட்டில் இருக்கும் மற்ற கம்ப்யூட்டர்களுடன் கனெக்ஷன் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் அவர்கள் என்னவெல்லாம் பார்க்கிறார்கள், எதில் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும். பெற்றோராகிய உங்கள் குழந்தையின் செயல்பாடுகள் தெரிந்திருப்பது அவசியம். மொபைலிலும் சில செட்டிங்ஸ் மூலம் அவர்களின் செயல்பாட்டைக் கண்காணிக்கலாம். தேவையற்ற செயலிகள் மற்றும் இணையதளங்கள் உபயோகிப்பதை  உங்கள் கவனத்துக்கு வந்தவுடன் அதனை தடுத்து நிறுத்திவிடுங்கள். 

5. பாதுகாப்பாக இருப்பது எப்படி?

எப்படியெல்லாம் இணையத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என சொல்லிக் கொடுக்கவும். இணைய ஆபத்துகள் எவ்வளவு விபரீதமானவை, அதனால் ஏற்படும் இழப்புகளையெல்லாம் சொல்லிக் கொடுங்கள். அப்படியான சிக்கலில் சிக்காமல் இருக்க எப்படியான இணையப் பக்கங்களுக்கு செல்லக்கூடாது, அறிமுகம் இல்லாத நபர்களுடன் உரையாடல் வைத்துக் கொள்ளக்கூடாது என்பதை அடிக்கடி சொல்லிக் கொடுக்கவும். இதனைப் பற்றிய விழிப்புணர்வு அவர்களுக்கு ஏற்படுத்துவது கட்டாயம். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.