சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் எதிர்நீச்சல். டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கும் இந்த சீரியலுக்கென்று தமிழ்நாட்டில் ஏகப்பட்ட பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். முக்கியமாக இளைஞர்கள்கூட இந்த சீரியலை விரும்பி பார்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கோலங்கள் சீரியலை இயக்கிய திருச்செல்வம்தான் இந்த சீரியலின் இயக்குநர். இந்நிலையில் இதில் ஜனனி கதாபாத்திரத்தில் நடித்துவரும் மதுமிதா கார் விபத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.