Notice to actor Darshan for controversial talk about women | பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு நடிகர் தர்ஷனுக்கு நோட்டீஸ்

பெங்களூரு : பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய புகாரில், 10 நாட்களில் விளக்கம் அளிக்கும்படி நடிகர் தர்ஷனுக்கு கர்நாடக பெண்கள் கமிஷன் நோட்டீஸ் அளித்துள்ளது.

நடிகர் தர்ஷன், கன்னட திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து, 25 ஆண்டுகள் நிறைவடைந்தை ஒட்டி, கடந்த சில நாட்களுக்கு முன் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கபட்டணாவில் விழா நடந்தது.

அப்போது பேசிய அவர், ‘அவள் இன்று இருப்பாள், நாளை அவள் வருவாள்’ என பேசினார். இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியது.

‘பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ள அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என, கவுதியாரா சேனை அமைப்பினர், கர்நாடக பெண்கள் கமிஷனிடம் புகார் அளித்துள்ளனர்.

இதை பெற்று கொண்ட கமிஷன், ‘பத்து நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்’ என நடிகர் தர்ஷனுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது தவிர, ராஜராஜேஸ்வரி நகர் போலீஸ் நிலையத்தில் கணேஷ் கவுடா, ஜெகதீஷ் ஆகியோர் புகார் அளித்துள்ளனர்.

ஏற்கனவே, கடந்தாண்டு திரைக்கு வந்த காடீரா திரைப்பட வெற்றி விழாவில், கதை தொடர்பாக, தயாரிப்பாளர் உமாபதி குறித்து தர்ஷன் பேசிய பேச்சு, தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்யப்பட்டு உள்ளது.

இவ்விரு சம்பவத்திலும், நடிகர் தர்ஷன் இதுவரை விளக்கம் அளிக்காமல் மவுனம் காக்கிறார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.