On Kolkata dancers killing in US, India says taken up case strongly | அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக் கொலை: அடுத்தடுத்து தொடரும் சம்பவங்களால் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வாஷிங்டன்: இந்தியாவைச் சேர்ந்த அமர்நாத் கோஷ் என்ற நடனக்கலைஞர் அமெரிக்காவில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தை போலீசாரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக கூறியுள்ள இந்திய தூதரகம், அவரின் உறவினர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் தயாராக உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.

2024ம் ஆண்டு பிறந்ததில் இருந்து அமெரிக்காவில் படிக்கும் இந்தியர்கள் அடுத்தடுத்து இறந்து வருகின்றனர். சிலர் தாக்குதலுக்கு உள்ளான நிலையிலும், ஓரிருவர் மர்மமான முறையிலும் இறந்தனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவைச் சேர்ந்தவர் அமர்நாத் கோஷ். நடனக்கலைஞர். பெற்றோர் இறந்துவிட்டனர். அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் பிஎச்டி படித்து வந்தார். அங்கு அவர், படித்து வந்த கல்வி நிலையம் அருகே நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது, மர்ம நபர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி, அவர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இதனை கோல்கட்டாவில் வசிக்கும் அவரது நண்பர், சிக்காகோவில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

இதனையடுத்து இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், அமர்நாத் கோஷ் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்களின் அறிக்கையை கவனித்து வருகிறோம் என தெரிவித்துள்ளது.

மற்றொரு அறிக்கையில், அமர்நாத் கோஷின் உறவினர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். இந்த சம்பவத்தை போலீசார் மற்றும் கல்வி நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம் என தெரிவித்து உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.