“அதிமுக ஐடி விங் ஒரு கோடி வாக்குகளை கவரும்..!' – எஸ்.பி வேலுமணி நம்பிக்கை

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி அதிமுக ஐடி விங் நிர்வாகிகளுக்கான பயிற்சி பட்டறை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டார். அதில் பேசிய வேலுமணி, “ஐடிவிங் தான் கட்சியின் இதயம். இதை எடப்பாடியார் நேரடியாக கண்காணிக்கிறார்.

வேலுமணி

என்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள மாவட்டங்களில் நானே நேரடியாக கண்காணிப்பேன். நம்மை நாமே உயர்த்தி பேசக்கூடாது. திமுக-வின் தவறுகளையும், எடப்பாடியாரின் சாதனைகளையும் அதிகம் பதிவு செய்ய வேண்டும். இந்தக் கட்சிக்கு தான் எதிர்காலம் உள்ளது. மற்றக் கட்சிகளுக்கு எதிர்காலம் இல்லை.” என்றார்.

பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வேலுமணி, “திமுக, பாஜக ஐடி விங் பொய் பரப்புரை செய்கிறார்கள். மற்ற ஐடி விங்கில் ஒருவர் இருந்து கொண்டு, 20 பேர் இருப்பது போல போடுவார்கள். அதிமுக-வில் ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் ஐடிவிங்கைச் சேர்ந்த 2 பேர் இடம் பெற்றுள்ளனர். அதிமுக பொய்யான தகவல்களை பரப்ப மாட்டார்கள். மற்றவர்கள் பொய்யான தகவல்களை பரப்புகிறார்கள்.

வேலுமணி

பொய் பரப்புரைகளுக்கு பதிலடி தரும் வகையில் ஐடி விங் செயல்பாடுகள் இருக்கும். தற்போது எல்லோரும் போன் வைத்திருக்கிறார்கள். ஒரு கோடிக்கும் அதிகமான வாக்குகளை கவரும் வாய்ப்பை அதிமுக ஐடி விங் உருவாக்கும். விளவங்கோடு தேர்தலில் போட்டியிடுவது குறித்து எடப்பாடியார் முடிவு செய்வார்.

எடப்பாடி பழனிசாமி உத்தரவுப்படி தேமுதிகவினரை பார்த்தோம். அதிமுகவில் கூட்டணி குறித்து பேசக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தேமுதிகவும் குழு அமைக்க உள்ளது. இரண்டு குழுவும் சேர்ந்து பேசி முடிவு செய்வார்கள். எந்தக் கட்சியிலும் கூட்டணி முடிவாகவில்லை. திமுக-வில் காங்கிரஸ் கூட்டணி முடிவாகிவிட்டதா. எல்லா கட்சியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி

தேர்தல் தேதியே இன்னும் அறிவிக்கவில்லை. கருத்து கணிப்புகள் என்பது சரியானதல்ல. கருத்து திணிப்பு செய்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தான் பெரிய இயக்கம். திமுக எந்தத் திட்டமும் தரவில்லை. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. பொதுமக்கள் அதிமுகவுக்கு வாக்களிக்கத் தயாராகி விட்டார்கள். ” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.