“அதானி உள்ளிட்டோர் மோடிக்கு ரகசியமாக கொடுத்த ரூ.6,500 கோடி..!" – ஆ.ராசா கேள்வி

தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கோவை ராஜவீதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, “திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற போது மிகவும் இறுக்கமாகவும், தயக்கமாகவும் இருந்தார். அப்போது கொரோனா உச்சகட்டத்தில் இருந்தது. எங்கு பார்த்தாலும் மரண ஓலம். கொரோனாவில் இறந்தவர்களுக்கு புதைக்க இடமில்லை.

ராசா

பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க படுக்கையில்லை. அப்போ நிதி அமைச்சரை அழைத்து ஆலோசித்தபோது, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ. 5 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு போனது தெரிந்தது. கொரோனா மற்றும் ரூ. 5 லட்சம் கோடி கடன் போன்றவைகள் இருந்தாலும்,  ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்லாமல், குடும்பத்தை கவனிக்க முடியாமல் பாதிப்படைந்தனர்.

அவர்கள் அனைவருக்கும் ரூ4,000 உதவித்தொகை வழங்குவோம் என்று கூறினார். அதை செய்தும் காட்டினார். இதுதான் ஒரு தலைவனுக்குரிய பண்பு. நாடாளுமன்ற கூட்டத்தில் ஒரு மணி நேரம் கேள்வி நேரத்துக்கு ஒதுக்கப்படும். நாட்டில் என்னென்ன பிரச்னைகள் உள்ளது என்பதை பிரதமர் இந்த கேள்வி நேரம் மூலம் நன்கு தெரிந்து கொள்ள முடியும். ஆனால் இதுவரை கேள்வி நேரத்துக்கு பிரதமர் மோடி வந்தது இல்லை. நாங்கள் நாடாளுமன்றத்தில் கேள்விகளை கேட்டுக் கொண்டிருப்போம்.

ராசா

அப்போது பிரதமர் மோடி மற்ற நாடுகளுக்கு டூர் சென்று கொண்டிருப்பார். இப்படி ஜனநாயக மரபுகளை சிதைக்கின்ற ஒரு பிரதமரை நான் இதுவரை கண்டதில்லை. தேர்தல் நேரத்தில்  அதானி உள்பட பலர் ரூ 6,500 கோடி மோடிக்கு ரகசியமாய் கொடுத்துள்ளனர். அப்படி ரகசியமாய் பணம் வாங்குவதற்கு என்ன அவசியம்.

இதுவரை நாடாளுமன்றத்தில் மோடி மீது வைத்த குற்றச்சாட்டுக்கு  விளக்கம் அளிக்க  மோடிக்கு அருகதை உள்ளதா. என் மீது சாட்டப்பட்ட ஊழல் குற்றச்சாட்டில் நேர்மையாக பதிலளித்து, அந்த வழக்கில் இருந்து வெளிவந்த என்னைப்போல் நீதிமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தை எதிர்கொள்கின்ற வலிமை மற்றும் யோகிதை மோடிக்கு இருக்கிறதா. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் திமுக இருக்காது என்று மோடி கூறுகிறார்.

மோடி

நான் கூறுகிறேன் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்று தற்போதுள்ள ஒன்றிய அரசை மாற்றினால் கண்டிப்பாக பிரதமர் மோடி சிறைக்குச் செல்வார். பெரியார், அண்ணா, கலைஞர் தமிழை வளர்த்தனர், தமிழ்நாட்டை வளர்த்தனர். இவற்றை தாண்டி திமுக தலைவர், இன்றைய முதல்வர் இந்தியாவை வளர்க்க மோடியிடம் இருந்து இந்தியாவை காப்பாற்ற முயற்சி எடுத்து வருகிறார்.” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.