ரோகித் சர்மாவை வீழ்த்த பிளான் போட்ட 2 மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்..!

இந்தாண்டு ஐபிஎல் போட்டி மார்ச் 22 ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் பல்வேறு மாற்றங்கள் பின்னணியில் நடந்து கொண்டிருக்கின்றன. ஏற்கனவே அதிரடியாக கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, ஹர்திக் பாண்டியா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதனால் இந்தாண்டு ஒரு பிளேயராக மட்டுமே அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாட இருக்கிறார். கட்டாயம் பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே பிளேயிங் லெவனில் தொடர்ச்சியாக  இடம் கொடுப்பது இல்லையென்றால் அவருக்கு மாற்றாக வேறு பிளேயரை ஆட வைப்பது என்ற முடிவில் இருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம்.

இதனை சூசகமாக தெரிவித்துள்ளார் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர். இது குறித்து அவர் பேசும்போது, ரோகித் சர்மா சிறந்த பிளேயர் மற்றும் கேப்டனாகவும் தன்னை நிரூபித்துள்ளார். இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக அவருடைய பேட்டிங் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. கேப்டன் என்ற பொறுப்பின் பணிச்சுமை காரணமாக ரோகித் பேட்டிங் பாதிக்கப்படுவதாக நினைக்கிறோம். அதனால் இந்தாண்டு அவர் தன்னுடைய கவனத்தை முழுமையாக பேட்டிங்கில் செலுத்த வேண்டும் என்பதற்காகவும், அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கேப்டன் பொறுப்பில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

அதாவது பேட்டிங்கில் ஆடவில்லை என்றால் அணியில் இருந்து நீக்கப்படுவார் என்பதை மறைமுகமாக மார்க் பவுச்சர் தெரிவத்துவிட்டார். இதே முடிவில் தான் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் இருக்கிறார். அவருடன் இப்போது ரோகித் சர்மா மீது அதிருப்தியில் இருக்கும் இஷான் கிஷனும் சேர்ந்துள்ளார். இருவருமே ரோகித் மீது அதிருப்தியில் உள்ள பிளேயர்கள். அதுவும் ஒன்றாக பயிற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அதனால் ரோகித் சர்மாவுக்கு ஆப்பு வைக்க இருவரும் பெரிய திட்டத்துடன் இம்முறை ஐபிஎல் தொடரில் களமிறங்க இருக்கிறார்கள். 

இஷான் கிஷன் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஓப்பனிங் இறங்குவது உறுதியாகியுள்ளது. அவருடன் ரோகித் இறங்குவாரா? அல்லது மிடில் ஆர்டருக்கு மாற்றப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படியே ஓப்பனிங் இறங்கினாலும் 2 போட்டிகளுக்கும் மேல் சொதப்பினால் வெளியே உட்கார வைத்துவிடலாம் என்கிற முடிவில் இருக்கிறார் ஹர்திக். அந்த விஷயம் ரோகித்துக்கும் தெரியாமல் இல்லை. அதற்கேற்ப தன்னுடைய பேட்டிங்கில் கவனம் செலுத்த முடிவெடுத்திருக்கிறார் ரோகித். ஆனால், அவருடைய திட்டம் பலிக்குமா? அல்லது இஷான் மற்றும் பாண்டியா திட்டம் பலிக்குமா? என்பது தான் இப்போதைக்கு விடை தெரியாத கேள்வியாக இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.