Life Insurance: ஆயுள் காப்பீடு – எந்த நிறுவனங்களில் எளிதாக செட்டில்மெண்ட் கிடைக்கும்?

ஒவ்வொரு நபரும் தனது இறப்புக்கு பின் குடும்பத்தின் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஆயுள் காப்பீடு பாலிசி எடுக்கிறார்கள். ஒருவேளை அசம்பாவிதமாக இறக்க நேரிட்டால் குடும்பத்துக்கு காப்பீடு வாயிலாக நிதிப் பாதுகாப்பு கிடைக்கும். ஆனால், ஆயுள் காப்பீடு பாலிசிகளில் முதலீடு செய்வதற்கு முன் கிளைம் செட்டில்மெண்ட் விகிதத்தை (Life Insurance death Claim settlement ratio) பார்த்து முதலீடு செய்ய வேண்டியது அவசியம்.

இன்ஷூரன்ஸ்

கிளைம் செட்டில்மெண்ட் விகிதம் என்றால் என்ன?

ஒவ்வொரு இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கும் ஆண்டுதோறும் பல்வேறு இன்ஷூரன்ஸ் கிளைம்கள் வருகின்றன. ஆனால் எல்லா கிளைம்களுக்கும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் செட்டில்மெண்ட் வழங்குவதில்லை. ஆக, ஒரு இன்ஷூரன்ஸ் நிறுவனம் எத்தனை கிளைம்களுக்கு செட்டில்மெண்ட் வழங்குகிறது என்பதை குறிப்பதே கிளைம் செட்டில்மெண்ட் விகிதம். உதாரணமாக, 100 கிளைம்களில் 98 கிளைம்களுக்கு செட்டில்மெண்ட் வழங்கப்பட்டால், கிளைம் செட்டில்மெண்ட் விகிதம் 98 சதவிகிதம்.

ஒரு இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் கிளைம் செட்டில்மெண்ட் விகிதத்தை வைத்து அதன் நம்பகத்தன்மையையும், கிளைம் எளிதாக பெற முடிகிறதா என்பதையும் புரிந்துகொள்ளலாம். அவ்வகையில், 2022-23 ஆண்டுக்கான இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் கிளைம் செட்டில்மெண்ட் விகிதங்களை காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையமான ஐ.ஆர்.டி.ஏ.ஐ (IRDAI) வெளியிட்டுள்ளது.

Insurance claim

இதன்படி, இந்திய இன்ஷூரன்ஸ் துறையின் மொத்த தனிநபர் இறப்பு கிளைம் செட்டில்மெண்ட் விகிதம் (individual death claim settlement ratio) சராசரியாக 98.45 சதவிகிதமாக இருந்துள்ளது. அதிக கிளைம்களுக்கு செட்டில்மெண்ட் வழங்கிய நிறுவனமாக Max Life (99.51%) முதலிடத்தில் இருக்கிறது. இரண்டாம் இடத்தில் HDFC Life (99.39%), மூன்றாம் இடத்தில் Aegon (99.37%), நான்காம் இடத்தில் Edelweiss Tokio (99.20%), ஐந்தாம் இடத்தில் Bharti Axa (99.10%) ஆகிய நிறுவனங்கள் இருக்கின்றன.

இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் கிளைம் செட்டில்மெண்ட் விகிதம் (முழு பட்டியல்):

insurance death settlement

Max Life : 99.51%

HDFC Life : 99.39%

Aegon : 99.37%

Edelweiss Tokio : 99.20%

Bharti Axa : 99.10%

PNB Met Life : 99.06%

Bajaj Allianz : 99.04%

Tata AIA : 99.01%

Canara HSBC OBC : 99.01%

Pramerica Life : 98.80%

Aviva : 98.75%

Reliance Nippon : 98.58%

LIC : 98.52%

Kotak Mahindra : 98.25%

Aditya Birla Sun Life : 98.12%

Sahara : 97.87%

Shriram : 97.40%

SBI Life : 97.05%

India First : 97.04%

Exide Life : 96.27%

Star Union : 96.07%

Ageas Federal : 96.06%

ICICI Prudential : 95.28%

Future Generali : 95.04%

2022-23 ஆண்டில் எல்.ஐ.சி நிறுவனம் மட்டும் 9.22 லட்சம் கிளைம்களுக்கு செட்டில்மெண்ட் வழங்கியுள்ளது. மறுபுறம் தனியார் துறை நிறுவனங்கள் அனைத்தும் 1.54 லட்சம் கிளைம்களுக்கு செட்டில்மெண்ட் வழங்கியுள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.