கைப்பந்து லீக்: மும்பையிடம் போராடி வீழ்ந்தது சென்னை

சென்னை,

9 அணிகள் இடையிலான 3-வது பிரைம் வாலிபால் (கைப்பந்து) லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 28-வது லீக் ஆட்டத்தில் சென்னை பிளிட்ஸ்- மும்பை மீட்டியார்ஸ் அணிகள் மல்லுக்கட்டின.

தொடக்கம் முதல் கடைசி வரை திரில்லிங்காக நகர்ந்த இந்த ஆட்டத்தில் மும்பை அணி 11-15, 15-13, 16-14, 5-15, 21-19 என்ற செட் கணக்கில் சென்னையை தோற்கடித்து 5-வது வெற்றியை சுவைத்தது. சென்னை அணிக்கு இது 3-வது தோல்வியாகும்.

மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு டார்படோஸ் 15-6, 15-11, 15-12 என்ற நேர் செட்டில் ஐதராபாத் பிளாக் ஹாக்சை வீழ்த்தி 4-வது வெற்றியை பதிவு செய்தது. இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ்-டெல்லி டூபான்ஸ் அணிகள் மோதுகின்றன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.