சிஎஸ்கே அணியின் மதிப்புமிக்க வீரர் யார்? தோனி, ஜடேஜா, ருதுராஜ் இல்லை…

Chennai Super Kings Latest News In Tamil: அதிரடியான ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதியில் இருந்து தொடங்குகிறது. கடந்த இரண்டு சீசன்களை போல், 10 அணிகள் இந்த தொடரில் மோத உள்ளன. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோத சென்னை சேப்பாக்கத்தில் மோத உள்ளன.

இந்த சீசனின் முதல் போட்டியிலேயே எம்எஸ் தோனி, விராட் கோலி ஆகிய இரு பெரும் நட்சத்திரங்கள் விளையாடுவதையும் பார்க்க கிரிக்கெட் ரசிகர்கள் கோடிக் கணக்கொண்டு காண காத்திருக்கின்றனர் எனலாம். வழக்கம் போல் இது தோனியின் கடைசி சீசன் என்று கூறப்பட்டாலும், நேற்றைய தோனியின் புதிய பேஸ்புக் பதிவு ரசிகர்களிடம் பல கேள்விகளை எழுப்பி உள்ளது. 

புதிய சீசனுக்கும், புதிய பொறுப்புக்காவும் காத்திருக்கிறேன் என தோனி நேற்று பதிவிட்டிருந்தது அவர் கேப்டன்ஸியில் இருந்து விலகிவிடுவாரோ என்ற அச்சத்தை ரசிகர்களுக்கு உள்ளது. இருப்பினும், தோனியின் பதிவுக்கான பின்னணி என்பது விரைவில் தெரிந்துவிடும். இவை மட்டுமின்றி சிஎஸ்கே அணிக்கு சில நாள்கள் முன் பெரும் பின்னடைவாக டேவான் கான்வே தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதைக் கண்டு சிஎஸ்கே ரசிகர்கள் திகைத்து நின்றாலும், டேவான் கான்வேவின் சக நியூசிலாந்து வீரரான ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட்டுடன் தொடக்க வீரராக களமிறங்குவார் என்பது உறுதியானதில் ஆறுதலும் கிடைத்து. கடந்த ஏலத்தில் சிஎஸ்கே அணி ரச்சின் ரவீந்திராவை 1.8 கோடி ரூபாய்க்கு எடுத்தது. அவரை மட்டுமின்றி மற்றொரு நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செலை ரூ.14 கோடிக்கும், சமீர் ரிஸ்வி என்ற உள்நாட்டு வீரரை ரூ. 8.40 கோடிக்கும், ஷர்துல் தாக்கூரை ரூ.4 கோடிக்கும், முஷ்தபிஷூர் ரஹ்மானை ரூ.2 கோடிக்கும் சிஎஸ்கே ஏலத்தில் எடுத்தது. இளம் விக்கெட் கீப்பர் பேட்டரான அவினாஷ் ராவ் ஆரவல்லியை ரூ. 20 லட்சத்திற்கும் எடுத்தது. 

தொடர்ந்து ஐபிஎல் தொடர் மீதும், சிஎஸ்கே அணி மீதும் தொடர்ந்து எதிர்பார்ப்பு எகிறி வருகிறது. இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர் இன்னும் சில நாள்களில் நிறைவடைய உள்ள நிலையில், முழு கவனமும் ஐபிஎல் தொடர் மீதுதான் இருக்கும். அந்த வகையில், தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சிஎஸ்கே அணி குறித்து அவரது யூ-ட்யூப் சேனலில் பேசி உள்ளார். மேலும், டேவான் கான்வேவின் காயம் குறித்தும் ரச்சின் ரவீந்திரா குறித்தும் அதில் விரிவாக பேசியுள்ளார். 

அந்த வீடியோவில் ஆகாஷ் சோப்ரா பேசுகையில்,”டேவான் கான்வே விலகியிருந்தாலும் சென்னை சூப்பர் கிங்க் அணி இன்னும் பலமிக்க அணியாகவே எனக்கு தோன்றுகிறது, ஏனென்றால் அவர்கள் எதையாவது செய்து யாரையாவது கண்டுபிடித்துவிடுவார்கள். ஏற்கெனவே, அவர்களிடம் டேவான் கான்வேவுக்கு மாற்று வீரராக அற்புதமான வீரரான ரச்சின் ரவிந்திரா இருக்கிறது. கடந்த ஓடிஐ உலகக் கோப்பையிலும், சமீபத்திய டெஸ்ட் தொடர்களிலும் நன்றாக விளையாடி இருக்கிறது. அவர் தன் வாழ்வின் உச்ச ஃபார்மில் இருக்கிறார் எனலாம். 

இருப்பினும், அவர் டி20 அரங்கில் பெரிதாக சாதித்தது இல்லை என்றாலும் அவர் சிஎஸ்கே அணிக்கு விளையாடுகிறார் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ரச்சின் ரவிந்திராவின் புதிய டி20 அவதாரத்தை நாம் பார்க்கலாம். இடது ஓப்பனர், இடது கை சுழற்பந்துவீச்சாளர் என சிஎஸ்கேவின் மதிப்புமிக்க வீரராக வருவதற்கான அத்தனை கூறுகளும் அவரிடம் உள்ளது” என்றார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.