வாட்ஸ்அப் சாட்களை எல்லாம் ஒரே PDF-க்கு மாற்றி சேமிக்க முடியுமா? எப்படி?

வாட்ஸ்அப் செயலியில் ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான மெஜேசஜ்கள் எல்லாம் சிலருக்கு வந்து கொண்டே இருக்கின்றன. தினம்தோறும் தேவையில்லாத மெசேஜ்களை தேடிதேடி அழிப்பதே அவர்களுக்கு சிரமமான வேலையாக இருக்கும். அதற்கு இப்போது முடிவு கிடைத்துவிட்டது. இனி வாட்ஸ்அப் மெசேஜ்களை எல்லாம் எக்ஸ்போர்ட் செய்து பிடிஎப் பைல்களாக மாற்றிக் கொள்ளலாம். அது எப்படி என தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கும், சார்ந்தவர்களுக்கும் உதவியாக இருக்கும்.

பலருக்கும் வாட்ஸ்அப் சாட் எக்ஸ்போர்ட் இருப்பது தெரியும். ஆனால் இப்போது அதில் வந்திருக்கும் அப்டேட் என்னவென்றால் நீங்கள் எக்ஸ்போர்ட் செய்யும் சாட்களை எல்லாம் மீடியா பைல்களுடன் எக்ஸ்போர்ட் செய்து கொள்ளலாம். அத்துடன் அவற்றை பிடிஎப் பைல்களாக மாற்றி சேமித்துக் கொள்ளலாம் என்பதுதான் இப்போது வந்திருக்கும் லேட்டஸ்ட் அப்டேட். ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் என இரண்டு மொபைல்களிலும் எப்படி பிடிஎப் பைல்களாக மாற்றி சேமிக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

வாட்ஸ்அப் பைல்களை ஆண்ட்ராய்டு மொபைலில் பிடிஎப் பைல்களாகவும், ஐஓஎஸ் பயனர்கள் File.Zip பைல்களாகவும் சேமித்துக் கொள்ளலாம். டெஸ்க்டாப் வாட்ஸ்அப்பில் இந்த அம்சம் இருக்கிறது. ஆண்ட்ராய்டு பயனர்கள் இப்போது ஒரு வாட்ஸ்அப் சாட்டை கிளிக் செய்து அதன் கீழ் உள்ள ஒட்டுமொத்த மெசேஜ்களையும் எக்ஸ்போர்ட் (WhatsApp message PDF export) செய்ய முடியும். இப்படி ஒரு சாட்டை எக்ஸ்போர்ட் செய்யும் பொழுது, அந்த தனிப்பட்ட வாட்ஸ்அப் சாட்டின் கீழ் உள்ள அணைத்து டெக்ஸ்ட் மெசேஜ்கள் மற்றும் மீடியா பைல்கள் மற்றும் PDF பைலாக (PDF file) மாற்றப்படும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் வீடியோ மற்றும் வாய்ஸ்கால் விபரங்கள் இடம்பெறாது.

நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் எக்ஸ்போர்ட் செய்ய விரும்பும் சாட்களுக்கு சென்று அங்கு ஸ்கிரீனில் மேல் வலது மூலையில் தென்படும் மூன்று கோடுகளை கிளிக் செய்து, அதில் காண்பிக்கும் எக்ஸ்போர்ட் சாட் என்பதை கிளிக் செய்ய வேண்டும். அப்போது பிடிஎப் வடிவில் சேமிக்க வேண்டுமா? என்று கேட்கும், அதற்கு ஓகே கொடுத்தால் வாட்ஸ்அப் சாட்கள் பிடிஎப் வடிவில் ஸ்டோரேஜ் ஆகும். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.