சக்திவாய்ந்த பஜாஜ் பல்சர் என்எஸ் 400 அறிமுக விபரம் – Automobile Tamilan

பஜாஜ் ஆட்டோவின் பல்சர் பைக் வரிசையில் புதிதாக இணைக்கப்பட உள்ள பல்சர் என்எஸ் 400 விற்பனைக்கு 2024-2025 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் விற்பனைக்கு வெளியாக உள்ளது.

சமீபத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தலைவர் ராஜீவ் பஜாஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில் புதிய பிரீமியம் பல்சர் பைக் விற்பனைக்கு ஏப்ரல் முதல் ஜூன் மாதத்திற்குள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார். இதனை தவிர உலகின் முதல் சிஎன்ஜி பைக் மாடலும் பஜாஜ் வெளியிட உள்ளது.

Bajaj Pulsar NS400

கேடிஎம் 390 டியூக் மற்றும் டிரையம்ப ஸ்பீடு 400 உள்ளிட்ட பைக்குகளை இடம்பெற்றுள்ள 44.25 bhp பவர் மற்றும் 39Nm டார்க் வழங்குகின்ற நிலையில் 399cc சிங்கிள்-சிலிண்டர் லிக்யூடு கூல்டு என்ஜினை புதிய பஜாஜ் பல்சர் என்எஸ்400 பகிர்ந்து கொள்ளலாம்.

அல்லது டாமினார் 400 பைக்கில் இடம்பெற்றுள்ள 373 சிசி என்ஜினை பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்புள்ளது.

ஸ்டீரிட் ஃபைட்டர் மாடல் முற்றிலும் புதிய டிசைனை பெற்று மிகவும் சக்தி வாய்ந்த மாடலாக விளங்குவதுடன் முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் சஸ்பென்ஷன் பெறலாம்.

டூயல் சேனல் ஏபிஎஸ் இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் பெற உள்ளது.

மிகவும் ஸ்போர்ட்டிவான அம்சங்களை கொண்டதாகவும், கனெக்ட்டிவிட்டி அம்சங்களை பெற்ற டிஜிட்டல் கிளஸ்ட்டர் ஆகியவற்றை கொண்டதாக வரவுள்ளது.

புதிய பஜாஜ் பல்சர் என்எஸ் 400 பைக்கின் விலை ரூ.2.40 லட்சத்தில் துவங்க வாய்ப்புகள் உள்ளது.

மேலும் படிக்க – பஜாஜ் பல்சர் பைக்குகளின் சிறப்புகள்

The post சக்திவாய்ந்த பஜாஜ் பல்சர் என்எஸ் 400 அறிமுக விபரம் appeared first on Automobile Tamilan.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.