நாளுக்கு நாள் பொருளாதாரத்தை வலுப்படுத்தி மக்களுக்கு இன்னும் வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக பாராளுமன்றத்தில்  –  ஜனாதிபதி 

நாளுக்கு நாள் பொருளாதாரத்தை வலுப்படுத்தி மக்களுக்கு இன்னும் இன்னும் வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாளுக்கு நாள், மிகவும் பலவீனமாகக் காணப்பட்ட பொருளாதாரத்தை வலுப்படுத்துவதாக மக்களுக்குப் இன்னும் இன்னும் வசதிகளை வழங்குவதற்கு அரசாங்கம் செயற்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இவையனைத்தும் திட்டமிடலுக்கு ஏற்ப இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இன்று பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு உரையாற்றினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, நாம் அனைவரும் முறைப்படி மற்றும் விஞ்ஞான ரீதியான திட்டமிடலுக்கு இணங்க செயற்படுகிறோம். பொருளாதாரத்திற்கு சுமையாகும் விதத்தில் நிவாரணம் வழங்குவதனால் மீண்டும் நரகத்திலிருந்து நாட்டை இழுத்தெடுக்க எம்மால் முடியாது.

சில குறுகிய தீர்வுகளினால் இச்சிக்கல்களை தீர்க்க முடியும் என யோசிக்கின்றனர். வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடமிருந்து  10 டொலர்கள் வீதம் அல்லது 100 டொலர்கள் வீதம் பெற்றுக் கொள்ள சில யோசனைகளை முன்வைக்கின்றனர். அது சரியாக பாடசாலையொன்றைச் சுற்றியுள்ளவர்களிடமிருந்து பணம் பெற்று அப்பாடசாலையை விருத்தி செய்ய முடியும் என்பது போல்  நியாயமற்ற பரிந்துரைகள் போன்றவற்றினால் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு முடியாது என்றும், எவ்வாறேனும் பொருளாதார அறிவுடையவர்கள் அதனைப் புரிந்துகொள்வார்கள்.  

இப்படியான நேரத்தில் எமது முன்னால் இருப்பது ஒரு பிரச்சினை. நாம் இவ்வாறே தொடர்ந்தும் செல்வதா, இல்லையா,

இவ்வாறே தொடர்ந்து சென்று பொருளாதாரத்தை வலுப்படுத்தலின் பெறுபேற்றை நாம் ஒரு நாடாக அனுபவிப்பதா? இல்லாவிடின் இத்திட்டத்தையும் இல்லாமல் செய்து, கடந்த ஒன்றரை அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு முன் காணப்பட்ட உதவியில்லாத, வங்குரோத்து நிலைக்கு மீண்டும் நாட்டைக் கொண்டு செல்வதா? தீர்மானியுங்கள். நரகத்தில் விழுவதா? இல்லாவிடின் இதே வழியில் சுவர்க்கத்தை நோக்கிச் செல்வதா?

இந்தப் பயணம் தவிர வேறு வழி எமக்கு இல்லை. நாம் இது வரை பெற்றுள்ள சாத்தியப்பாடுகளின் ஊடாக அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் இதே வழியில் முன்னோக்கிச் செல்வதற்காக அவசியமான சட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிகள் பாராளுமன்றத்தில் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு தான் எதிர்பார்ப்பதாகவும் அந்த நோக்குடன் பொருளாதார மறுசீரமைப்புச் சட்டம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் வெற்வரி வீதத்தை மேலும் குறைப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும், புத்தகம், பாடசாலை மற்றும் சுகாதார உபகரணங்கள், மருந்துப் பொருட்கள் போன்றவற்றிற்கு வெற் வரியிலிருந்து விலக்களிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.  நலிவடைந்த பொருளாதாரத்தை தற்போது உயர்ந்த நிலையில் காணக்கிடைப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி நாளுக்கு நாள் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டினார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.