ஏர்டெல்லுக்கு ஆப்பு வைக்க ஜியோவின் 84 நாட்கள் பிளான் – 395 ரூபாய் விலையில்..!

ஜியோ, ஏர்டெல் இடையே யூசர்களை கவர்வதில் பெரிய யுத்தமே டெலிகாம் துறையில் நடந்து கொண்டிருக்கிறது. இதில் ஒரு படி முன்னால் ஜியோ இருந்தாலும் ஏர்டெல் நிறுவனமும் ஈடு கொடுக்கும் விதமாக சூப்பர் பிளான்களை எல்லாம் அறிவித்திருக்கிறது. இருப்பினும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு மன உளைச்சலைக் கொண்டு வரும் வகையில் இப்போது புதிய பிளானை கொண்டு வந்திருக்கிறது ஜியோ. வெறும் 395 ரூபாய் விலையில் 84 நாட்கள் வேலிடிட்டி பிளான் ஜியோ அறிமுகம் செய்திருக்கிறது. இந்த பிளான் ஜியோ வாடிகைகயாளர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது. எந்த திட்டத்தில் யூசர்களுக்கு என்னென்ன சலுகைகள் எல்லாம் கிடைக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

ஜியோவின் 395 ரூபாய் பிளான்

பட்ஜெட் வாடிக்கையாளர்களை குறி வைத்து தான் ஜியோ இந்த பிளானை அறிமுகப்படுத்தியிருக்கிறது. குறைவான விலைக்கு ஏற்ப, வேலிடிட்டியை தவிர மற்ற சலுகைகளும் குறைவாகவே கொடுக்கப்பட்டிருக்கின்றன. யூசர்கள் மொத்தமாக வெறும் 6ஜிபி டேட்டா மட்டுமே பெறுவார்கள். அதிக டேட்டா பயன்படுத்தாத தினசரி கூலி வேலைகளுக்கு செல்லும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் உகந்ததாக இருக்கும். வழக்கம்போல் ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (Jio Cinema) மற்றும் ஜியோ கிளவுட் (Jio Cloud) போன்ற சப்ஸ்கிரிப்சன்கள் கிடைக்கும்.

5ஜி அம்சம் இந்த திட்டத்தில் இருக்கிறதா?

ஜியோ வாடிக்கையாளராக இருந்து 5ஜி நெட்வொர்க் கிடைக்கும் பகுதியில் இருந்தால் உங்களுக்கு இந்த திட்டதிலும் 5ஜி நெட்வொர்க் கிடைக்கும். இதில் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், 6ஜிபி டேட்டா முடிந்த பிறகு டேட்டா வேகம் 65kbps ஆக குறைந்துவிடும். அதேநேரத்தில் ஜியோ பிரீமியம் சப்ஸ்கிரிப்சன் இந்த திட்டத்தில் இல்லை. ஐபிஎல் தொடரை பார்க்க வேண்டும் என விரும்புபவர்களாக இருந்தால், இந்த திட்டத்தை தேர்வு செய்தால் தனியாக ஜியோ சினிமா சப்ஸ்கிரிப்சனை பெற வேண்டியிருக்கும்.

ஏர்டெல் நிறுவனத்தின் பிளான் என்ன?

இந்த பிளானுக்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனம் வைத்திருக்கும் ரீச்சார்ஜ் பிளான் விலை 399 ரூபாய். தினமும் 2.5 ஜிபி டேட்டா நன்மை மற்றும் 3 மாதங்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் உண்டு. ஆனால் வேலிடிட்டி வெறும் 28 நாட்களுக்கு மட்டுமே என்பதை வாடிக்கையாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.