மத்திய வங்கியின் சம்பள அதிகரிப்புத் தொடர்பாக நிதி செயற்குழு வழங்கும் அறிக்கைக்கு இணங்க தீர்மானங்களை எடுப்பதற்கு அரசாங்கம் தயார் – பிரதமர்

“மத்திய வங்கியில் சம்பள அதிகரிப்புத் தொடர்பாக பாராளுமன்றத்தின் நிதி செயற்குழு வழங்கும் அறிக்கைக்கு இணங்க தீர்மானிப்பதற்கு அரசாங்கம் தயார் என்றும், பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் எஸ் எம். மரைக்கார் பாராளுமன்றத்தில் கே ட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் நேற்று (06) இவ்வாறு குறிப்பிட்டார்.

ஒவ்வொரு நிறுவனத்தினதும் உற்பத்திகளை அதிகரிப்பதற்காக தொழிற்சங்கங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை ஏற்படுத்துவதாகவும், எனினும் அதில் ஒவ்வொரு நிறுவனமும் பின்பற்றும் குறியீடுகள் வேறுபாடானவை என்றும்,

மத்திய வங்கியின் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவது தொடர்பாக அரசாங்கத்தின் நிதி குறித்து செயற்குழு தயாரிக்கும் அறிக்கையில் அது தொடர்பாகக் கவனம் செலுத்துவதாக பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

மத்திய வங்கி தொடர்பாக மாத்திரமன்றி ஏனைய வங்கிகள் குறித்தும் இதன் போது கவனத்திற் கொள்வதாகவும் குறிப்பிட்ட பிரதமர் தினேஷ் குணவர்தன , அந்த சகல தகவல்களையும் கருத்திற் கொண்ட அறிக்கையொன்றை பாராளுமன்றத்தின் நிதி தொடர்பான செயற்குழுவினால் எதிர்பார்க்கப்படுவதாகவும், அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஹர்ஷ டி சில்வா விற்குக் குறிப்பிட்டார்.

” 2022 ஆம் ஆண்டிலிருந்து பொருளாதாரச் சிக்கலை எதிர்கொண்ட இலங்கை மத்திய வங்கியினாால் மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகளைக் கவனத்திற் கொள்ள வேண்டியதாக அதிகரித்ததுடன், இலங்கை மத்திய வங்கியில் இருந்து விலகிய ஊழியர்களின் எண்ணிக்கை பாரிய அளவில் அதிகரித்தது. அத்துடன் எஞ்சிய ஊழியர்களிடம் ஒப்படைக்கப்பட்ட கடமைகளும் பொறுப்புக்களும் என்ற

கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் அதிகரித்ததுடன், இலங்கை மத்திய வங்கியின் செயற்பாடுகளுக்கு இடையூறுகளின்றி மேற்கொள்வதற்காக அதிகூடிய நிபுணத்துவத்துடனான பயிற்சியுடனான அதிகாரிகள் தொடர்ந்தும் சேவையில் தங்கியிருப்பது அத்தியாசியமாகும். சம்பள சீர்திருத்தம் மூன்று வருடங்களுக்கு (2024-2026), சம்பந்தப்பட்ட மூன்று வருட கால இறுதி எவ்வித இடையூறும் இன்றி செல்லுபடியாகும்”.

மத்திய வங்கி ஊழியர்குழாத்திற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வரையறை தொடர்பாக அவரின் பதிலில் இவ்விடயங்கள் உள்ளடக்கப்பட்டன.

“இலங்கை மத்திய வங்கியின் ஊழியர்களுக்கு மத்திய வங்கியில் பணியாற்றும் போது வேறு தொழிலில் அல்லது வியாபாரங்களில் ஈடுபடுவதற்கு சந்தர்ப்பம் இல்லை.

 

இலங்கை மத்திய வங்கியின் ஊழியர்களின் ஈடுபாட்டுடன் முரண்பாடுகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்கு படுத்தப்பட்ட நிதி நிறுவனங்களில் முதலிடுதல், நிதி மற்றும் வர்த்தக சந்தைப் பிரிவுகளில் முதலிடுவதை வரையறுத்தல்” என்பனவாகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.