Tamil News Live Today: `அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு; சிலிண்டர்களுக்கு மானியம்’ – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

`அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு’

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணம் ஆகியவற்றின் கூடுதல் தவணையை 1.1.2024 முதல் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது அடிப்படை ஊதியம்/ஓய்வூதியத்தில் தற்போதுள்ள 46 சதவீதத்தை விட 4 சதவீதம் அதிகமாகும்.

மத்திய அமைச்சரவைக் கூட்டம்

அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகிய இரண்டின் காரணமாக அரசுக்கு ஏற்படும் ஒட்டுமொத்தச் செலவு ஆண்டுக்கு 12,868.72 கோடி ரூபாயாக இருக்கும்.  இதன் மூலம் 49.18 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 67.95 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். 7-வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், இந்த ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பிரதமரின் உஜ்வாலா இலவச சமையல் எரிவாயுத் திட்டத்தின் பயனாளிகளுக்கு ரூ.300 மானியத்தை தொடர்ந்து அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், 2024-25 பருவத்தில் கச்சா சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, செயற்கை நுண்ணறிவு, புதுமைக் கண்டுபிடிப்பு சூழலை வலுப்படுத்துவதற்கான இந்தியா செயற்கை நுண்ணறிவு இயக்கம், உத்தர்பூர்வா மாற்றத்திற்கான தொழில்மயமாக்கல் திட்டம், முதலியவற்றுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.