சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக நாசர் செயல்பட்டு வருகிறார், பொதுச்செயலாளராக விஷால் மற்றும் பொருளாளராக கார்த்தி செயல்பட்டு வருகின்றனர். இந்த சங்கத்திற்கான கட்டிடத்தை கட்டுவதற்காக கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர் சங்க நிர்வாகிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் போதுமான நிதி இல்லாத காரணத்தால் இந்த சங்க கட்டுமான பணி தொடர்ந்து தள்ளி போய் வருகிறது.