NSBM நிறுவனத்தில் மருத்துவ பீடத்தை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி

அரசிற்கு சொந்தமானதும் முழுமையான சுய இலாபமீட்டும் நிறுவனமான வரையறுக்கப்பட்ட தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவனத்தினால் (NSBM ) கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு மற்றும் இலங்கை மருத்துவ சங்கத்தின் மேற்பார்வை மற்றும் ஒழுங்குபடுத்தலின் கீழ் மருத்துவ பீடத்தை நிறுவுதல் மற்றும் அதன் ஊடாக MBBS எனும் வைத்தியப் பட்டத்தை வழங்குவதற்கு ஆலோசிக்கப்பட்டது.

அப்பட்டப்படிப்பிற்காக வருடாந்தம் 500 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மாணவர்களை உள்வாங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் இம்மருத்துவ பீட மாணவர்களுக்காக மருத்துவப் பயிற்சி வழங்குவதற்குப் பொருத்தமான அரசாங்க வைத்தியசாலை என்ற ரீதியில் வேறுபடுத்துவதற்காக NSBM நிறுவனத்தினால் அனுமதி கோரப்பட்டுள்ளது.

ஸ்ரீஜயவர்தனபுரப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவர்களின் மருத்துவப் பயிற்சிக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலையைப் பயன்படுத்துவதற்கும் அமைச்சரவை அனுமதி தற்போது வழங்கப்பட்டுள்ளதுடன், அதற்கு இடையூறு ஏற்படாதவாறு NSBM நிறுவனத்தின் மருத்துவ பீட மாணவர்களின் வைத்தியப் பயிற்சிக்கும் பேராசிரியர்களின் பிரிவு வசதிகளுக்காகவும், வளங்களைப் பகிர்ந்தளிக்கும் அடிப்படையில் ஹோமாகம ஆதார வைத்தியசாலையை ஒதுக்கீடு செய்வதற்கான பொறிமுறையொன்றைத் தயாரிப்பதற்காக ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மருத்துவர்கள் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள வைத்தியக் கல்வியின் தரக்கட்டளைகளுக்கு ஏற்ப ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு அவசியமான நிதியை வழங்குவதற்கு NSBM நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க, ஹோமாகம ஆதார வைத்தியசாலையை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வந்து, போதனா வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.