ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் அணியின் டாப் 5 பேட்ஸ்மேன்கள்..!

Mumbai Indians Batting line-up: ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த ஆண்டு ஐபிஎல் 2023 தொடரில் நான்காவது இடத்தைப் பிடித்தது. இந்தமுறை மிகப்பெரிய மாற்றமாக அந்த அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டு இந்த முறை ஒரு பேட்ஸ்மேனாக மட்டும் விளையாட இருக்கிறார். ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக இம்முறை களமிறங்க இருக்கிறார். இதனால் அந்த அணியில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் மீது எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியில் இருக்கும் டாப் பேட்ஸ்மேன்கள் யார் என்பதை பார்க்கலாம். 

1. சூர்யகுமார் யாதவ்

SKY என்று அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் T20 ஸ்பெஷலிஸ்ட். சூர்யகுமார் கடந்த ஆண்டு ஐபிஎல் 2023 தொடரில் சிறப்பாக விளையாடினார். 43.21 சராசரி மற்றும் 181.13 ஸ்ட்ரைக் ரேட்டில் 605 ரன்கள் எடுத்தார். அத்துடன் சூர்யகுமார் யாதவ் 28 சிக்ஸர்களை அடித்தார். கடந்த சீசனில் ஆட்டமிழக்காமல் 103 அதிகபட்சமாக எடுத்தார். இம்முறையும் இவரின் பேட்டிங் மீது எதிர்பார்ப்பு இருக்கிறது.

2. இஷான் கிஷன்

இந்திய அணியின் இளம் நட்சத்திரமாக பார்க்கப்படும் இஷான் கிஷன் அண்மைக்காலமாக அதிருப்தியில் இருந்து வருகிறார். தொடர்ச்சியாக இந்திய அணியில் வாய்ப்பளிக்காததால் இந்திய அணியில் இருந்து வெளியேறி ரஞ்சி கோப்பையும் விளையாடாமல் பிசிசிஐ ஒழுங்கு நடவடிக்கையில் சிக்கியிருக்கும் அவர், ஐபிஎல் தொடருக்காக தீவிரமாக தயாராகிக் கொண்டிருக்கிறார். கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் 30.27 சராசரி மற்றும் 142.76 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 454 ரன்கள் எடுத்தார். தன்னுடைய திறமையை நிரூபிக்க ஐபிஎல் தொடரை வாய்ப்பாக இஷான் கருதியிருப்பதால் அவரின் பேட்டிங் இந்த ஐபிஎல் தொடரில் உற்று கவனிக்கப்படும்.

3. கேமரூன் கிரீன்

கேமரூன் கிரீன் ஐபிஎல் 2023 தொடரில் 50.22 சராசரி மற்றும் ஸ்டிரைக் ரேட் 160.28-ல் 452 ரன்களை எடுத்தார். ஆல்ரவுண்டரான இவர் மும்பை அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். இம்முறையும் அதே பாணியிலான பேட்டிங்கை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

4. திலக் வர்மா

ஐபிஎல் 2023ல் மும்பை இந்தியன்ஸ் அணியின் சிறந்த வீரராக இருந்தவர் திலக் வர்மா. தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட அவர், பேட்டிங் விளையாடுவதைப் போலவே சுழற்பந்துவீச்சும் சிறப்பாக வீசக்கூடியவர். கடந்த ஐபிஎல் தொடரில் 42.88 சராசரியில் 343 ரன்கள் எடுத்தார். அதிகபட்சமாக 84 ரன்கள் திலக் வர்மா ஆட்டமிழக்காமல் எடுத்தார்.

5. ரோஹித் சர்மா

கடந்த முறை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக களமிறங்கிய ரோகித் சர்மா 20.75 சராசரியில் 332 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்த முறை கேப்டன்சி இல்லாமல் ஒரு பேட்ஸ்மேனாக அவர் களமிறங்குவதால், ரோகித் சர்மா பேட்டிங் மீது அனைவரின் கவனமும் உள்ளது. அடுத்துவர உலக கோப்பை தொடருக்கு ஐபிஎல் தொடரில் ரோகித் விளையாடுவதைப் பொறுத்தே 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் இவருடைய இடம் இருக்கும். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.