Family Budget: வரவு செலவுகளை சரியாக நிர்வகிக்க உதவும் நவீன 40:20:40 பார்முலா..!

Family Budget: இன்றைய இளைஞர்களில் பலர் கை நிறைய சம்பாதிக்கிறார்கள். ஆனாலும், அவர்கள் மாதக் கடைசியில் செலவுக்கு பணம் இல்லாமல் கடன் வாங்குகிறார்கள். அல்லது கடன் அட்டையை (Credit Card) தேய்க்கிறார்கள். கடன் அட்டை மூலம் அடுத்த மாத சம்பளத்தை முன்கூட்டியே செலவு செய்துவிடுவதால், தொடர்ந்து கடனாளியாக இருக்கிறார்கள். அவசிய செலவு ஏதாவது வரும் நிலையில் கிரெடிட் கார்டு பாக்கி பணத்தில் குறைந்தபட்ச தொகையை மட்டும் கட்டுகிறார்கள். இதனால், அவர்களின் கிரெடிட் கார்டு கடன் வட்டி இல்லாத இலவசக் காலத்தை கடந்து ஆண்டுக்கு சுமார் 35-45 சதவிகிதம் வட்டி கட்டும் நிலையில் சிக்கிக் கொள்கிறது.

நிதித் திட்டமிடல்

குடும்ப வரவு செலவு திட்டம்..!

இது போன்ற நிலையை தவிர்க்க, குடும்ப வரவு செலவுகளை பட்ஜெட் (Family Budget) போட்டு செய்ய வேண்டும். பொதுவாக குடும்ப பட்ஜெட் போடும் போது, 50:30:20 என்கிற பார்முலா பயன்படுத்தப்படும். இதில், 50 என்பது அவசியத் தேவைகளான (Need) உணவு, உடை, உறைவிடம் (வீடு), மளிகை பொருள்கள் ஆகியவற்றுக்கான செலவு சதவிகிதத்தை குறிக்கிறது. அடுத்து 30 என்பது ஓட்டல் சாப்பாடு, சினிமா, ஊர் சுற்றுவது ஆகிய விரும்பத்துக்கான (Wants) செலவுக்கான சதவிகிதம் ஆகும். இறுதியாக உள்ள 20 என்பது சேமிப்பு மற்றும் முதலீட்டுக்கான (Savings and Investment) சதவிகிதம் ஆகும்.

 இது பழங்காலத்தில் வீட்டுச் செலவுகளுக்கு போடப்பட்ட குடும்ப பட்ஜெட் பார்முலா ஆகும். அந்தக் காலத்தில் அனைவருக்கும் சம்பளம் குறைவாக இருந்ததால், சம்பளத்தில் அதிக சதவிகிதம் ஒதுக்கப்பட்டாலும் தொகை குறைவாக இருந்தது. மேலும், விலைவாசி உயர்வு பெரிதாக இல்லை. தேவைகளும் பெரிதாக இல்லை. இதனால், சம்பளத்தில் சிறிய பகுதியை சேர்த்தாலே போதுமானதாக இருந்தது.

நவீன குடும்ப பட்ஜெட் பார்முலா..!

இன்றைக்கு 20 ஆண்டுகளுக்கு முன் 30 வயதான பலரின் சராசரி சம்பளம் என்பது சுமார் ரூ.3,000-ரூ.5,000 ஆக இருந்தது. இதில் 50% என்பது ரூ.2,500 ஆகும். இப்போது 30 வயதானவர்களின் மாதச் சராசரி சம்பளம் ரூ.50,000 ஆக உள்ளது. இதில் சிலரின் சம்பளம் ரூ.60,000, ரூ.70,000, ரூ.1 லட்சம் என அதிகமாக உள்ளது.

Family Budget | குடும்ப பட்ஜெட்

மாதச் சம்பளம் ரூ.60,000-ல் 50% என்பது ரூ.30,000 ஆகும். இந்த நிலையில் குடும்ப பட்ஜெட் பார்முலாவை  40:20:40 என மாற்றுவது மூலம் வாழ்க்கைமுறை (Lifestyle) விலைவாசி (Inflation) உயர்வை சுலபமாக சமாளிக்க முடியும். அதாவது மொத்த சம்பளத்தில் 40% தொகையை அவசியத் தேவைகளுக்கும் 20% தொகையை விரும்பத்துக்கும் 40 சதவிகித தொகையை சேமிப்பு மற்றும் முதலீட்டுக்கும் என மாற்றி ஒதுக்க வேண்டும்.

தானியங்கி சேமிப்பு முறை..!

சேமிப்பு மற்றும் முதலீட்டை தானியங்கி (Automation) ஆக்க வேண்டும். அதாவது, சம்பளம் வரவு வைக்கப்படும் வங்கி சேமிப்பு கணக்கிலிருந்து வங்கி, தபால் அலுவலக ஆர்.டி அல்லது மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி முறை முதலீட்டுக்கு பணம் ஆட்டோமேட்டிக் ஆக செல்ல வேண்டும். அதாவது, சம்பளத்தில் முதல் செலவு சேமிப்பு மற்றும் முதலீடாக இருக்கும். இப்படி செய்யும்பட்சத்தில் தேவையில்லாத செலவுகள் கட்டுக்குள் வரும். இப்படி ஒருவர் மூன்று மாதம் செய்தாலே அது பழகி விடும்.

Family Budget | குடும்ப பட்ஜெட்

இப்படி பார்முலா போட்டு செலவு மற்றும் முதலீடுகளை சதவிகித அடிப்படையில் செய்யும் போது அடுத்து சம்பளம் அதிகரிக்கும் தானே சேமிப்புத் தொகை மற்றும் முதலீட்டுத் தொகை அதிகரித்து விடும். உதாரணத்துக்கு ஒருவர் மாதம் ரூ.60,000 சம்பளம் வாங்குகிறார் என்றும் அவர் அவசியத் தேவை: ஆசைக்கான செலவுகள் மற்றும் சேமிப்பு, முதலீடு முறையே 40:20 மற்றும் 40 என இருக்கும் போது ரூ. அவசியத் தேவை 24,000: விருப்பம் ரூ.12,000 மற்றும் முதலீடு ரூ.24,000 ஆக இருக்கும்.இதுவே சம்பளம் ரூ. 70,000 ஆக உயரும் போது, இந்த பார்முலாபடி சேமிப்பு மற்றும் முதலீட்டுக்கு ஒதுக்கப்படும் தொகை தானே ரூ.28,000 ஆக அதிகரித்துவிடும்.

கட்டுரையாளர்: யாசீன் சாஹர்

பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்..!

சேமிப்புத் தொகையை நீண்ட கால நிதித் தேவைகளுக்கு (பிள்ளைகளின் உயர்கல்வி, கல்யாணம், சொந்த வீடு) பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானம் தரும் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீட்டு செய்து வந்தால் சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது எனலாம். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.