மதுரை: `ரிஸ்க் எடுக்க விரும்பாத நிர்வாகிகள்’ – சு.வெங்கடேசனை எதிர்த்து சரவணன் தேர்வானது எப்படி?!

திமுக கூட்டணி வேட்பாளர் சி.பி.எம் கட்சியின் சு.வெங்கடேசனை எதிர்த்து அதிமுக வேட்பாளராக டாக்டர் சரவணன் அறிவிக்கப்பட்டுள்ளது மதுரை அரசியலில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

டாக்டர் சரவணன்

மதுரையின் பிரபலமான சரவணா மருத்துவமனை குழுமத்தின் தலைவர் டாக்டர் சரவணன், ஆரம்பத்தில் ம.தி.மு.க, பா.ஜ.க என பயணித்து பின்பு தி.மு.க-வில் இணைந்து திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வானார். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது சீட் வழங்காததால் தி.மு.க-விலிருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்து, தேர்தலில் போட்டியிட்டார். பின்பு பா.ஜ.க-வின் மாநகர மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்தவர், அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் மீது பா.ஜ.க-வினர் செருப்பு வீசிய விவகாரத்தினால், அக்கட்சியிலிருந்து விலகியவர், பின்பு அ.தி.மு.க-வில் இணைந்து மருத்துவ அணியின் மாநில நிர்வாகியாக செயல்பட்டு வந்தார்.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மதுரை மாவட்டத்தில் அ.தி.மு.க நிர்வாகிகள் பெரிதாக யாரும் முன்வரவில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது சீட் கேட்டு போட்டி போட்டவர்கள், இந்தமுறை கட்சி அலுவலகம் பக்கம் வராமல் எஸ்கேப் ஆனார்கள். இன்னொரு பக்கம், சில நிர்வாகிகள், தங்களுக்கு சீட் கேட்காமல் எடப்பாடி பழனிசாமி பெயரில் விருப்ப மனு கொடுத்து வந்தார்கள். அதில், தனக்கு சீட் வேண்டும் என்று விருப்ப மனு கொடுத்த நபர் டாக்டர் சரவணன் மட்டும்தான்.

பி.மூர்த்தியுடன் சு.வெங்கடேசன்

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அதிமுக ஐ.டி விங் தலைவர் ராஜ் சத்யனும் இம்முறை சீட் கேட்கவில்லை. மாவட்டச் செயலாளர்களான செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா ஆகியோர் வேறு யாரையும் சிபாரிசு செய்யவில்லை. முக்கிய நிர்வாகிகள் பலரை போட்டியிட வற்புறுத்தியும் யாரும் ‘ரிஸ்க்’ எடுக்க விரும்பவில்லை என நினைப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் பிடித்தவராக இருந்த டாக்டர் சரவணனை வேட்பாளாராக அறிவித்துள்ளார். ஓரளவு மதுரை மக்கள் மத்தியில் பிரபலமானவர் என்பதும், தொண்டு நிறுவனம் மூலம் பல்வேறு சேவைகளை செய்தும், பணம் பலம் மற்றும் சமூக ரீதியாகவும் செல்வாக்கானவர் என்ற அடிப்படையில் டாக்டர் சரவணனை களம் இறக்கியுள்ளார்கள்.

டாக்டர் சரவணன்

பா.ஜ.க கூட்டணியில் யாரை நிறுத்துகிறார்கள் என்பது தெரியாத நிலையில் ஸ்டார் வேட்பாளரான சு.வெங்கடேசனுக்கு எதிராக மற்றொரு ஸ்டார் வேட்பாளரான டாக்டர் சரவணன் போட்டியிட உள்ளது மதுரையில் அனலை ஏற்படுத்தியுள்ளது.

அது மட்டுமின்றி, டாக்டர் சரவணனுக்கு மாவட்டத்தில் சில கூடுதல் அதிகாரமிக்க பதவிகளும் கொடுக்கப்படலாம் என்ற தகவலும் பரபரக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.